Home
Gadgets

ஓடியாங்க, ஓடியாங்க.. டால்பி ஆடியோ, HDR 10.. பிளிப்கார்ட் ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 (Flipkart Big Billion Days Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரபலமான ரெட்மி 4கே டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 43 இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 2024 (Redmi Smart Fire TV 4K 2024) மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,490 விலையில் வாங்க முடியும்.

ஓடியாங்க, ஓடியாங்க.. பிளிப்கார்ட் ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி..

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 அம்சங்கள் (Redmi Smart Fire TV 4K 43 Specifications) : 4K டிஸ்பிளே, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் HDR 10, விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடலில் உள்ளன.

குறிப்பாக ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடல் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மேலும் ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல் இயங்கும். அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது

அதன்படி வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடியாங்க, ஓடியாங்க.. பிளிப்கார்ட் ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி..

வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடலில் உள்ளன. பின்பு இந்த டிவியின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அதாவது டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய டிவி. மேலும் 24W ஸ்பீக்கர்கள் வசதியும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த டிவி தள்ளுபடி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Smart Fire TV 4K 43 Gets 53 Percent Discount on Flipkart Big Billion Days Sale Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X