ஓடியாங்க, ஓடியாங்க.. கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் Fire டிவி மாடலை அறிமுகம் செய்த Redmi.!
ரெட்மி நிறுவனம் தனித்துவமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்து அதிரடி காட்டியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதாவது ரெட்மி நிறுவனம் புதிய 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி அம்சங்கள்
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல் ஆனது எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1366x768 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதேபோல் Fire OS 7 மூலம் இயங்குகிறது இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல். பின்பு பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி போன்ற பிரபலமான ஆப் பயன்பாடுகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை Fire OS ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.

ஆடியோவை பொறுத்தவரை, ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக ஓடிடி இல் வெளியாகும் படங்களை இந்த இந்த ஸ்மார்ட் டிவி ஆதரவுடன் தெளிவாகவும், சிறந்த ஆடியோ வசதியுடன் பார்க்க முடியும்.
ப்ளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை, ஏர்பிளே மற்றும் மிராகாஸ்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட், 3.5mm socket உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல். குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை விட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது இந்த அசத்தலான 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இதன் ரிமோட்டில் அலெக்ஸா பட்டன் உள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.

என்ன விலை?
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல் ஆனது ரூ13,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு எம்ஐ.காம் மற்றும் அமேசான் தளத்தில் வரும் மார்ச் 21-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வருகிறது. அதேபோல் வங்கி சலுகைகளுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








