வீட்டுக்கு 1 பார்சல்.. ரூ.8182 பட்ஜெட்ல 100 இன்ச்.. ரெட்மி புரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் புதிய புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.
அதாவது ரெட்மி நிறுவனம் தற்போது ரெட்மி புரொஜெக்டர் லைட் (Redmi Projector Lite) எனும் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி புரொஜெக்டர் லைட் அம்சங்கள் (Redmi Projector Lite): 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் (1080p resolution) கொண்டுள்ளது இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடல். மேலும் இதில் 100 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 150 CVIA லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடல். இதுதவிர சீல்டு ஆப்டிகல் எஞ்சின் (sealed optical engine) மற்றும் சூப்பர்-ட்ரான்ஸ்பரன்ட் லென்ஸ் (super-transparent lens) ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ரெட்மி புரொஜெக்டரில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

குறிப்பாக ரெட்மி புரொஜெக்டர் லைட் ஆனது SGS நிறுவனத்திடம் லோவ் ப்ளூ லைட் சான்றிதழ் பெற்றுள்ளது. அதாவது கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ToF லேசர் சென்சிங் மாட்யூல்கள் (ToF laser sensing module) கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். மேலும் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடலில் உள்ள ஏஐ அல்காரிதங்கள் (AI algorithms) ஆட்டோமேட்டிக் பிக்சர் கரெக்சன், அட்ஜெஸ்ட்மென்ட் போன்ற அம்சங்களைச் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mijia ஆப் மூலம் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கண்ட்ரோல் செய்ய முடியும். பின்பு கணினி மற்றும் மொபைல் இரண்டிலிருந்தும் வயர்லெஸ் ஸ்கிரீன் ப்ரொஜெக்ஷனை ஆதரிக்கிறது இந்த அசத்தலான ரெட்மி புரொஜெக்டர். இதுதவிர ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடலில் புளூடூத் வழியாக வெளிப்புற ஆடியோ சாதனங்களையும் எளிமையாக இணைக்கலாம்.

3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB)போர்ட், டிசி இன் பவர் இன்புட் (DC IN power input) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடலில் உள்ளன. அதேபோல் இந்த ரெட்மி புரொஜெக்டர் மாடல் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
என்ன விலை? ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாடல் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரெட்மி புரொஜெக்டர் லைட் மாடலின் விலை 699 யுவான் ( இந்திய மதிப்பில் ரூ.8,182) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








