கம்மி விலை.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. AI அம்சம்.. அறிமுகமானது புது Redmi புரொஜெக்டர்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் புதிய புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் (Redmi Projector Lite Green Edition) தான் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் அம்சங்கள் (Redmi Projector Lite Green Edition Specifications): 150 CVIA லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியுடன் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் 100 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது.
அதேபோல் 1.2:1 புரோஜெக்சன் ரேசியோ மற்றும் 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் (1080p resolution) ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி புரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மூலம் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும். அதேபோல் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் மாடலில் 100 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே பெரிய திரையில் ஓடிடி படங்களைப் பார்க்க இது மிகவும் வசதியாக இருக்கும். பின்பு இது லோவ் ப்ளூ லைட் சான்றிதழ் உடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஆப்டிகல் எஞ்சின் (optical engine) மற்றும் சூப்பர்-ட்ரான்ஸ்பரன்ட் லென்ஸ் (uper-transparent lens) உடன் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இவை தெளிவான மற்றும் அதிக துல்லியமான நிறங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் ஆப்டிகல் எஞ்சின் ஆனது டஸ்ட் ப்ரூப் ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும் வுழகு சென்சார் உடன் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் வெளிவந்துள்ளது. இது ஆட்டோ ஃபோகஸிங் மற்றும் பிக்சர் கரெக்சன் போக்ற அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக இதில் ஆட்டோமேட்டிக் பிக்சர் கரெக்சன் செய்ய ஏஐ அல்கோரிதம் (AI algorithms) பயன்படுத்துவதாக ரெட்மி நிறுவனம் கூறியுள்ளது.

3.5எம்எம் ஹெட்போன் ஜாக், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி புரொஜெக்டர் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ரெட்மி புரொஜெக்டர் லைட் கிரீன் எடிஷன் ஆனது தற்போது சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த புரொஜெக்டர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ரெட்மி புரொஜெக்டர் விலை 799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.9,343)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








