சத்தமின்றி புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்த Redmi.. 120-இன்ச்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?
தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளை விட ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதுவும் 75 இன்ச், 85-இன்ச், 100-இன்ச் டிவிகளை விட 120 அல்லது 150 ஸ்க்ரீன் சைஸ் கொடுக்கும் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் ரெட்மி நிறுவனமும் புதிய ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ (Redmi Projector 4 Pro) மாடல் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ அம்சங்கள்: இந்த புதிய ரெட்மி ப்ரொஜெக்டர் ஆனது 1080 பிக்சல் ரெசல்யூஷன் (1080P resolution) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 600 CVIA லுமன்ஸ் பிரைட்னஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம். எனவே இந்த ப்ரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சின் இந்த ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடலில் உள்ளது. இது பிரைட்னஸ் அவுட்புட்-ஐ மேம்படுத்தும், பின்பு தூசி ஊடுருவலைத் தடுக்கிறது மற்றும் 29dB வரை குறைந்த இரைச்சல் அளவுகளுடன் செயல்படுகிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
சக்திவாய்ந்த மீடியாடெக் எம்டி9660 பிராசஸர் (MediaTek MT9660 processor) உடன் ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு சியோமி ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட் (Xiaomi HyperOS Connect) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. எனவே இந்த ப்ரொஜெக்டரில் மேம்பட்ட பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவுடன் ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் 45-இன்ச் முதல் 120-இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இதன் மூலம் பெரிய திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 100-இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது
எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடலில் உள்ளது. மேலும் எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் (SGS low blue light certification) பெற்றுள்ளது இந்த சாதனம்.
கீஸ்டோன் கரெக்சன் (keystone correction) ஆதரவு ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடலில் உள்ளது. அதுவும் இந்த கீஸ்டோன் கரெக்சன் அம்சம் ஆனது AI அல்காரிதம்களுடன் ToF லேசர் மாட்யூல் மற்றும் HD கேமராவைப் பயன்படுத்துகிறது. இது சுவரில் உள்ள தடைகளைக் கண்டறிந்து, படத்தை ஒரு ப்ரொஜெக்ஷன் திரை சட்டகத்திற்குள் பொருத்துவதற்கு தானாகவே சீரமைக்க முடியும். இந்த மாற்றங்கள் பொதுவாக இரண்டு வினாடிகளுக்குள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடலில் பாஸ் ரேடியேட்டர்கள் மற்றும் 500 சிசி சவுண்ட் டூயல் 8W ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளன.
தற்போது ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ப்ரொஜெக்டர் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரெட்மி ப்ரொஜெக்டர் 4 ப்ரோ மாடலின் விலை 1,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,460)-ஆக உள்ளது.
photo credit: jd.com, gizmochina


Click it and Unblock the Notifications








