Home
Gadgets

யாரு சாமி நீ.. வெறும் ரூ.9,999 விலையில Tablet தர.. பட்டையை கிளப்பும் Redmi Pad SE 4G.. விற்பனை தேதி இதான்..

அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையில் டேப்லெட் விற்பனையா? என்று ஆச்சரியப்படும் வகையில் சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி பிராண்டின் கீழ் நிறுவனம் இன்று இரண்டு புதிய டேப்லெட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மற்றும் ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) என்ற இரண்டு மாடல்களை ரெட்மி நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் மிகவும் மலிவு விலை விருப்பமாக ரூ. 9,999 விலையில் Redmi Pad SE 4G வெளிவந்துள்ளது.

யாருக்கெல்லாம் புதிதாக டேப்லெட் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ, அவர்கள் இந்த புதிய ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) டேப்லெட் சாதனத்தை தாராளமாக வாங்கலாம். காரணம், இது இப்போது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் விலையை விட மிகவும் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி பேட் எஸ்இ 4ஜி டேப்லெட்டின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

யாரு சாமி நீ.. வெறும் ரூ.9,999 விலையில Tablet தர..  Redmi Pad SE 4G..

ரெட்மி பேட் SE 4G டேப்லெட் (Redmi Pad SE 4G Tablet):

ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) டேப்லெட் சாதனம் 8.7" இன்ச் அளவு கொண்ட எச்டி எல்சிடி டிஸ்பிளேவை (ஹ்த் LCD Display) கொண்டுள்ளது. இது மிகவும் ஸ்மூத்தா டிஸ்பிளே அனுபவத்தை வழங்க 90Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதுவொரு பட்ஜெட் டேப்லெட் சாதனமாக இருந்தாலும், இதில் சக்தி வாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 chipset) உடன் வருகிறது.

இந்த புதிய ரெட்மி பேட் SE 4G டேப்லெட் சாதனம் 4GB ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ் (Storage) வரையிலான மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக நிறுவனம் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) வழியாக 2TB ஸ்டோரேஜ் வரையிலான மெமரியை ஆதரிக்கும் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இது 8MP ரியர் கேமரா (Camera) மற்றும் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த புதிய டேப்லெட் சாதனம் 6650mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆப் தி பாக்ஸ் உடன் வருகிறது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Dual stereo speaker) மற்றும் டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு போன்ற பெஸ்டான லேட்டஸ்ட் அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ரெட்மி பேட் SE 4G டேப்லெட் விலை (Redmi Pad SE 4G Tablet Price):

இந்திய சந்தையில் புதிய ரெட்மி பேட் SE 4G டேப்லெட் (Redmi Pad SE 4G Tablet) 4GB + 64GB மாடல் ரூ. 9,999 என்ற அறிமுக சலுகை விலையிலும், இதன் 4GB + 128GB மாடல் ரூ.10,999 என்ற விலையிலும் வரும் ஆகஸ்ட் 8, 2024 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். இவற்றின் அசல் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 11,999 ஆகும்.

இந்த டேப்லெட் சாதனத்தின் மீது ICICI வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 கூடுதல் சலுகை கிடைக்கிறது. இந்த டேப்லெட் சாதனத்தை மக்கள் வரும் ஜூலை 8 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் இந்தியா (Flipkart India), சியோமி மற்றும் ரெட்மி தளங்கள் மற்றும் சியோமி ரீடைல் கடைகள் வழியாக வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad SE 4G 4GB 64GB Price Rs 9999 and 4GB 128GB Price Rs 10999 Launched India Sale July 8 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X