Redmi தடாலடி தள்ளுபடி.. 11 இன்ச் டிஸ்பிளே Tablet.. வெறும் ரூ.11,000 விலையில்.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்ட் கடந்த வாரம் புதிதாக ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE) என்ற டேப்லெட் (Tablet) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது இதன் மீது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி பிராண்டிற்கு சொந்தமான புதிய டேப்லெட் சாதனமான ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் (Redmi Pad SE Tablet) டிவைஸ் விற்பனை இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் 24, 2024 ஆம் தேதி முதல் துவங்கியது. அப்போது இந்த சாதனத்தின் மீது பெரியளவில் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) இந்தியா தளங்களில் குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் (Redmi Pad SE Tablet):
குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் மீது கிடைக்கும் சலுகைகள் சிறப்பானதாக இருக்கிறது. இந்த ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் சாதனம் இந்திய சந்தையில் மூன்று வேரியண்ட் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 4GB/128GB ஸ்டோரேஜ், 6GB/128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB/128GB ஸ்டோரேஜ் என்று மூன்று மாடல்கள் விற்பனைக்கு வந்தது.
இந்த டேப்லெட் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ. 12,999 ஆக அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் சிறப்பு வங்கி சலுகையின் பெயரில், இந்த Redmi Pad SE Tablet மீது முழுமையாக ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இது குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, இந்த Redmi Pad SE Tablet சாதனத்தின் விலை இப்போது ரூ.11,499 என்ற மிகவும் குறைந்த விலைக்கு வாங்க கிடைக்கிறது. தற்போது பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் சிறிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனின் விலையை விட மிக குறைந்த விலையில் இந்த டேப்லெட் சாதனம் 11" இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே டேப்லெட் சாதனத்தை வழங்குகிறது என்பது சிறப்பான விஷயமாகும்.

வெறும் ரூ.11,000 விலை புள்ளியில் 11" இன்ச் டிஸ்பிளே டேப்லெட் சாதனமா?
ஆம் மக்களே, இந்த ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் சாதனம் 11" இன்ச் அளவு கொண்ட முழு எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை 90Hz அடாப்டிவ் சிங்க் ரெஃப்ரஷ் ரேட் (Adaptive sync refresh rate) உடன் வழங்குகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Snapdragon 680 chipset) உடன் 4GB | 6GB | 8GB ரேம் அம்சத்துடன் 128GB ஸ்டோரேஜ் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த பட்ஜெட் விலை டேப்லெட் (Budget Price Tablet) சாதனம் 1TB வரையிலான எக்ஸ்பெண்டபிள் ஸ்டோரேஜ் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஸ்டோரேஜ் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை என்கிறது ரெட்மி. அடுத்தபடியாக, இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த டேப்லெட் சாதனம் 8MP பிரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட் டிவைஸ் 8000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 14 மணி நேர வீடியோ-பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. 219 மணி நேர மியூசிக்-பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது. இது டால்பி ஆடியோ அட்மாஸ் அம்சத்தையும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினத்தில் வெறும் ரூ.11,000 விலை புள்ளியில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் லேட்டஸ்ட் டேப்லெட் (Best latest tablet device) சாதனமாக இந்த சாதனம் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








