விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4,000 ரேட் கம்மி.. 10000mAh பேட்டரி.. டால்பி விஷன் டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி கொண்ட ரெட்மி பேட் ப்ரோ (Redmi Pad Pro) மாடலுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி பேட் ப்ரோ அமேசான் சேல் (Redmi Pad Pro Amazon Sale): இந்த ரெட்மி டேப்லெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. இதன் மார்கெட் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,000 விலை குறைப்புடன் ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது. அதுவே எச்டிஎப்சி கிரெடிட் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.3,500 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல எச்டிஎப்சி டெபிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.18,950 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.
ரெட்மி பேட் ப்ரோ அம்சங்கள் (Redmi Pad Pro Specifications): இந்த டேப்லெட்டில் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்ட 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 600 நிட்ஸ் எச்பிஎம் (HBM) மோட் வருகிறது.
மேலும், 249 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுக்கிறது. மெட்டல் பாடி டிசைனில் மிஸ்ட் ப்ளூ (Mist Blue) மற்றும் கிராஃபைட் கிரே (Graphite Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப பிரீமியம் ஆடியோ அவுட் வருகிறது.
ஆகவே, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. டூயல் மைக்ரோபோன்களை (Dual Microphones) பேக் செய்துள்ளது. இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடலன் பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Snapdragon 7s Gen 2 4nm) சிப் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) பேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏற்ப பேக்கப் சிஸ்டம் வருகிறது. 10000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரெட்மி டேப்லெட் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications