Home
Gadgets

ஆளுக்கொரு ஆர்டர்.. பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 10000mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் மற்றும் டால்பி விஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) டேப்லெட் பட்ஜெட்டில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): இந்த ரெட்மி டேப்லெட்டில் 12.1 இன்ச் (2560 × 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆளுக்கொரு ஆர்டர்.. பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 10000mAh பேட்டரி!

இந்த பெரிய டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது. இதுபோக டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 12.1 இன்ச் டிஸ்பிளேவில் பிரீமியம் குவாலிட்டி வீடியோ அனுபவம் எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.

ஆகவே, ஆடியோவும் பட்டையை கிளப்பும்படி ஸ்டீரியோ அனுபவம் கொடுக்கும். டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகின்றன. இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த 2 மாடல்களிலும் 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பட்டையை கிளப்பும் பேக்கப் கொடுக்க 10000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது. பெரிய பேட்டரி பேக் செய்யப்பட்டிருந்தும், 7.52 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 568 கிராம் எடை கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5G (5G), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) வருகிறது. டைப்-சி (Type-C Port) சப்போர்ட் உள்ளது. குயிக் சில்வர் (Quick Silver) மற்றும் கிராஃபைட்கிரே (Graphite Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டேப்லெட்டுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. விலை எப்படி?

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Redmi Pad Pro 5G Flipkart Sale): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஐசிஐசிஐ, எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,499 பட்ஜெட்டில் இந்த டேப்லெட்டை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Pro 5G With 10000mAh Battery Sale Under Rs 24000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X