இதான்பா முரட்டு டேப்லெட்.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. 5G சிப்செட்.. டால்பி அட்மோஸ்.. 10000mAh பேட்டரி.. எந்த மாடல்?
2.5K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, 5ஜி சிப்செட், 1.5 டிபி மெமரி, டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், 10000mAh பேட்டரியுடன் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) டேப்லெட் வெளியாக இருக்கிறது.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): இந்த ரெட்மி மாடலில் 12.1 இன்ச் (2560 × 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டில் பிரீமியம் டிஸ்பிளே குவாலிட்டி எதிர்பார்க்கலாம்.
மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4 என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) மொபைல் சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஹைபர் ஓஎஸ் (HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. மேலும் சிம் சிலாட் சப்போர்ட் வருகிறது.

8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த டேப்லெட்டில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது.
ஆகவே, ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதேபோல டூயல் மைக்ரோபோன்கள் (Dual microphones) வருவதால், வாய்ஸ் காலிங் அனுபவமும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த டேப்லெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 10,000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரி உடன் 7.52 மிமீ தடிமன் மற்றும் 571 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலை எதிர்பார்க்கலாம். மேலும், 5ஜி சிம் கனெக்டிவிட்டி வருவதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ சப்போர்ட் வர வாய்ப்புள்ளது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) சப்போர்ட் உள்ளது.
அதேபோல யுஎஸ்பி டைப்-சி 2.0 (USB Type-C 2.0) சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5ஜி மாடலாக வெளியாக இருப்பதால் மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது. இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலானது, குளோபல் மார்கெட்டில் மே மாதம் வெளியாக இருக்கிறது.
மேற்கூறிய அம்சங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 5ஜி கனெக்டிவிட்டி, டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல விலை விவரங்களும் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்திய மார்கெட்டுக்கு ஜூன் மாதத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








