தூள் பறக்குது ஆர்டர்.. Redmi Pad Pro 5G விற்பனை.. காம்போ சலுகைனு சொன்னதும் கூட்டம் அள்ளுது.. என்ன விலை?
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. விற்பனை வந்த சில நிமிடங்களிலேயே இந்த புதிய டேப்லெட் சாதனத்தின் மீது ஆர்டர்கள் குவியத்துவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் நீங்கள் ஒரு சூப்பரான புதிய டேப்லெட் சாதனத்தை, தரமான டிஸ்பிளே, சக்தி வாய்ந்த சிப்செட் மற்றும் பெரிய சைஸ் பேட்டரி உடன் வாங்க நினைத்தால், இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டை நீங்கள் தவறவிடவே கூடாது மக்களே. இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.
சியோமி (Xioami) நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி (Redmi) இன்று அதன் புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட் (Redmi Pad Pro 5G Tablet) சாதனத்தை விற்பனை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தசாதனம் Xiaomi இன் முதல் 5G இணைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது Wi-Fi ஒன்லி வேரியண்ட் மாடலாக இன்று முதல் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி முதல் விற்பனை இன்று (Redmi Pad Pro 5G First Sale Today):
இத்துடன் ரெட்மி நிறுவனம் இந்த டேப்லெட்டிற்கு பொருந்தும் ரெட்மி பேட் ப்ரோ கீபோர்டு, ரெட்மி ஸ்மார்ட் பென் மற்றும் ரெட்மி பேட் ப்ரோ கவர் உள்ளிட்ட டேப்லெட்டிற்கான பல ஆக்சஸரீஸ் பாகங்களையும் ரெட்மி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாகங்கள் இன்று முதல் வாங்குவதற்கும் கிடைக்கும். இதன் விலை பற்றிய விபரங்களையும் பார்க்கலாம். முதலில் Redmi Pad Pro 5G விலை விபரங்கள் இதோ.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) இரண்டு வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இதில் ஒன்று Wi-Fi இணைப்பு மற்றும் மற்றொன்று 5G மற்றும் Wi-Fi இணைப்புகளுடன் வருகிறது. Wi-Fi ஒன்லி மாடலின் விலை ரூ.21,999 ஆகும். ரெட்மி பேட் ப்ரோ 5ஜியின் 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் விலை ரூ.24,999 ஆகும். அதேசமயம் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் விலை ரூ.26,999 ஆகும்.
இந்த சாதனங்கள் Xiaomiயின் அதிகாரப்பூர்வ இணையதளம், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் Flipkart மற்றும் Amazon போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இன்று முதல் வாங்க கிடைக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கியது. Redmi Pad Pro 5G ஆனது கிராஃபைட் க்ரேய் (Graphite Grey) மற்றும் குவிக் சில்வர் (Quick Silver) வண்ணங்களில் வருகிறது. Wi-Fi ஒன்லி மாடல் கிராஃபைட் க்ரேய் மற்றும் மிஸ்ட் ப்ளூ (Mist Blue) நிறங்களில் வருகிறது.
Redmi Pad Pro 5G அக்சஸரீஸ்களின் விலை என்ன?
அறிமுக விற்பனையுடன் சிறப்பு சலுகையாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளில் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, ரெட்மி பேட் ப்ரோவை ரூ.21,498-க்கு அல்லது ஸ்மார்ட் பேனாவுடன் வாங்கும் பொழுது ரூ.25,497 என்ற காம்போ விலையுடன் நீங்கள் வாங்கலாம். கீபோர்ட் மற்றும் ஸ்மார்ட் பென் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு காம்போ ரூ.27,997 இல் தொடங்குகிறது.
இவற்றை தனித்தனியாக வாங்கினால் என்ன விலையாகும்? ரெட்மி ஸ்மார்ட் பேனாவின் விலை ரூ.3,999 ஆகும். இந்த டேப்லெட் இணக்கமாகும் கீபோர்டின் விலை ரூ.3,999 ஆகும். இறுதியாக, இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) டேப்லெட் கவர் ரூ.1,499 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








