ஆளுக்கு 1 ஆர்டர்.. பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 11 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் ரெட்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான பட்ஜெட்டில் ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதியானது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பென் கொண்ட மாடலாக களமிறங்க இருக்கும் இந்த ரெட்மி டேப்லெட்டில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 18ஆம் தேதியில் இந்த ரெட்மி பேட் 2 மாடல் வெளியாக இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. அதேபோல ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்றும் ரெட்மி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அமேசான் தளத்தில் ஸ்மார்ட் பென் கேபபலிட்டிகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ரெட்மி பேட் 2 மாடலானது, பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. ஆகவே, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை எப்படி எதிர்பார்க்கலாம் என்பதையும் அது எளிதாக்கி இருக்கிறது. இதே பீச்சர்கள் மற்றும் விலை இந்திய மார்கெட்டிலும் இருக்கலாம்.
ரெட்மி பேட் 2 அம்சங்கள் (Redmi Pad 2 Specifications): இப்போது, பார்க்கப்போகும் பீச்சர்கள் பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் கிடைத்தவையாகும். இந்த ரெட்மி டேப்லெட்டில் 11 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 2.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G100 Ultra) சிப்செட் கிடைக்கிறது. ஸ்மார்ட் பென்னுக்கு ஏற்ற டிஸ்பிளே பீச்சர்களுடன் ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) கிடைக்கிறது. 2 வேரியண்ட்கள் வருகின்றன.
ஆகவே, இந்த ரெட்மி பேட் 2 மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.9 எம்எம் தடிமன் மற்றும் 571 கிராம் எடை கொடுக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
8 எம்பி மெயின் கேமரா வருகிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இருக்கிறது. இந்த ரெட்மி பேட் 2 டேப்லெட்டுக்கு கூடுதல் மெமரிக்காக மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது.
கனெக்டிவிட்டியை பார்க்கையில் வை-பை (Wi-Fi) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (voLTE) கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மி பேட் 2 மாடலின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,192ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,050ஆக இருக்கிறது. இந்த விலை பிலிப்பைன்ஸ் நாட்டின் கரென்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அவ்வப்போது மாற்றம் இருக்கலாம். இருப்பினும், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல இந்தியாவில் ஆரம்ப வேரியண்ட்டின் விலை பிலிப்பைன்ஸ் மார்கெட்டை போலவே ரூ.16,000 பட்ஜெட் அல்லது அதைவிட மலிவாகவும் இருக்கலாம். ஏனென்றால், வை-பை அல்லது 4ஜி மாடல்களாகவும் இது கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications