REDMI போட்ட போடு.. 12000mAh பேட்டரி.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. 120 Hz டிஸ்பிளே.. புது 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் 5ஜி டேப்லெட் மாடலான ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (REDMI Pad 2 Pro 5G) இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. 12000mAh பேட்டரியை கொடுத்தது மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 120 Hz எல்சிடி டிஸ்பிளே மற்றும் 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுத்துள்ளது. இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரெட்மி நோட் 15 5ஜி (REDMI Note 15 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மாட்போனுடன் ரெட்மி பேட் 2 ப்ரோ (REDMI Pad 2 Pro) மற்றும் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (REDMI Pad 2 Pro 5G) ஆகிய டேப்லெட் மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதற்கு ரெட்மி பேட் 2 ப்ரோ கீபோர்ட் (REDMI Pad 2 Pro Keyboard), ரெட்மி ஸ்மார்ட் பென் (REDMI Smart Pen) வந்துள்ளது.

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Pad 2 Pro 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) கிடைத்துள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட் உள்ளது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட (வை-பை + 5ஜி) வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க உள்ளன. 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும், 2.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது.
360 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. மேலும், 600 நிட்ஸ் எச்பிஎம் (HBM) பிரைட்னஸ் உள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளது. ப்ரோ மாடலில் ஆன்டி கிளார் கிடைக்கிறது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி டேப்லெட் கொடுத்துள்ளது.

மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டுள்ளது. 12,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 5ஜி மாடலில் ஈசிம் சப்போர்ட் உள்ளது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 5ஜி வேரியண்ட்டின் ரூ.29,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 தள்ளுபடி போக ஜனவரி 12ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








