Home
Gadgets

வாங்குனா இதை வாங்கனும்.. 12000mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்கள்.. 120Hz டிஸ்பிளே.. புது Redmi பேட்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (Redmi Pad 2 Pro 5G) டேப்லெட் அறிமுகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருப்பதால், 12000mAh பேட்டரி, 4 ஸ்பீக்கர்கள், 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலையையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி டேப்லெட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி நிறுவனத்தின் டேப்லெட்கள் பட்ஜெட் விலையில் வெளியாகி வருகின்றன. ஆகவே, 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட இந்த டேப்லெட்டும் பட்ஜெட் விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் குளோபல் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

வாங்குனா இதை வாங்கனும்.. 12000mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்கள்.. மாடல்?

இதை ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை உறுதி செய்யவில்லை. ஆகவே, வரும் நாட்களில் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் தெரியவரும். அமேசான் அல்லது பிளிப்கார்ட் தளத்தில் ஓரிரு நாட்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்படும். இப்போது குளோபல் வேரியண்ட்டை பார்ப்போம்.

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad 2 Pro 5G Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட்டை இந்த ரெட்மி பேட் கொண்டுள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2.5K ரெசொலூஷன் கிடைத்துள்ளது.

மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 249 பிபிஐ பிக்சன் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த்தை இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் கொண்டுள்ளது. வெட் டச் டெக்னாலஜி கிடைப்பதால், டிராப் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கிடைக்கிறது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கிடைக்கிறது. இதில் வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டிகள் ஆப்ஷனில் கிடைக்கின்றன. 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட்டை இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெயின் கேமராவுக்கு டெலிப்ராம்டர் (Teleprompter) பீச்சர்கள் கிடைக்கிறது.

எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) சப்போர்ட் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலுக்கு கிடைக்கிறது. 12000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது. 7.5 எம்எம் தடிமனை இந்த இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் கொடுத்துள்ளது.

குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டுள்ளது. 5ஜி மற்றும் ஈசிம் சப்போர்ட் ஆப்ஷனில் கொடுக்கப்படுகிறது. மேலும், வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிராஃபைட் கிரே (Graphite Gray), சில்வர் (Silver) சப்போர்ட் கிடைக்கிறது.

லாவெண்டர் பர்பிள் (Lavender Purple) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி (வை-பை) கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,245 ஆக இருக்கிறது. அதேபோல 6ஜிபி ரேம் மர்ரும் 128ஜிபி மெமரி கொண்ட 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.39,580ஆக இருக்கிறது. இந்தியாவில் இதே விலைக்கு கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 Pro 5G Snapdragon 7s Gen 4 Launching Soon in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X