Home
Gadgets

Redmi அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 7600mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 9.7 மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ரெட்மி பேட் 2 9.7 மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் 2 9.7 அம்சங்கள் (Redmi Pad 2 9.7 specifications): 9.7-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2048 x 1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

Redmi அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 7600mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 6s Gen 2 chipset) உடன் ரெட்மி பேட் 2 9.7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இந்த டேப்லெட் மாடலில் அனைத்து கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

4ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி பேட் 2 9.7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி பேட் 2 9.7 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் ரெட்மி பேட் 2 9.7 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. அதேபோல் ஹை-ரெஸ் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

Redmi அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 7600mAh பேட்டரி.. எந்த மாடல்?

7600mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 9.7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

ரெட்மி பேட் 2 9.7 மாடலின் ஆரம்ப விலை 229 Singaporean dollar (இந்திய மதிப்பில் ரூ.17000) ஆக உள்ளது. தற்போது இந்த டேப்லெட் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 9.7 With 6330mAh battery launched global: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X