Home
Gadgets

ரெட்மி மேக்ஸ் 86-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன்களுடன் 86-இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி

குறிப்பாக இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் இந்த ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிவந்த தகவலின்படி, வரும் மார்ச் 4-ம் தேதி சீனாவில் இந்த ஸ்மார்ட் டிவியின் விற்பனை தொடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது 86-இன்ச் ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவி விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே)

3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே)

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது எல்இடி-backlit எல்சிடி பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே), 120Hz refresh rate, 178° viewing angle, எச்டிஆர், எச்டிஆர்10, எச்டிஆர்10+, உள்ளிட்டபல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

குவாட்-கோர் சிபியு

குவாட்-கோர் சிபியு

இந்த ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் சிபியு (ARM Cortex-A73), ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு சிப்செட்வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

இரண்டு ஸ்பீக்கர்கள்

இரண்டு ஸ்பீக்கர்கள்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி MIUI (TV 3.0) இல் இயங்குகிறது. இது Xiao Ai வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் பல்வேறு ஆதரவுகளை கொடுக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 12.5W அவுட்புட்-ஐ வழங்குகின்றன.

குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம்

வைஃபை, புளூடூத் 5.0, 2 x யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், ஏவி, மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆனது ஒரு MEMC

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது ஒரு MEMC வசதியைக் கொண்டுள்ளது. இது எஸ்டி முதல் எச்டி வரை இருக்கும் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.91,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi MAX 86-inch TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X