ரெட்மி நிறுவனத்தின் 100-இன்ச் டிவி அறிமுகம்.! அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ரெட்மி நிறுவனம் ரெட்மி மேக்ஸ் என்ற 100-இன்ச் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்க்ரீன் 2,540mmஅளவை கொண்டுள்ளது. மேலும் எல்.சி.டி பேனல் 4கே ரெஷலியூஷன், DCI-P3 colour gamut, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி.குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி மேக்ஸ் 100-இன்ச் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் MIUI மென்பொருள் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெட்மி மேக்ஸ் 100-இன்ச் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ,டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ போன்ற ஆதரவுகள் உள்ளது. இவைகண்டிப்பாக சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியைக் கொண்டு
வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ரெட்மி மேக்ஸ் 100-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 15 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பு இதில் வைஃபை 6, 2 ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி மேக்ஸ் 100-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,39,400-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி இந்த ஸ்மார்ட்
டிவி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்ரெட்மி மேக்ஸ் 100-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று
விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 20:6:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாகஇருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ,வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிகொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. குறிப்பாக மார்ச் 24-ம் தேதி பிளிப்கார்ட், மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications