Home
Gadgets

இதென்ன TV-ஆ இல்ல மினி தியேட்டர்-ஆ.. 90-இன்ச் 4K Smart TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

அடேங்கப்பா.. இது என்ன ஸ்மார்ட் டிவியா அல்லது வீட்டிற்குள்ளேயே 'செட்டப்' செய்யும் மினி சினிமா தியேட்டரா (Mini Cinema Theatre) என்று கேட்கும்படியாக ரெட்மி (Redmi) நிறுவனம், புதிய 90-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை (90-inch 4K Smart TV) அறிமுகம் செய்துள்ளது.

இது கடந்தாண்டு அறிமுகமான ரெட்மி 100-இன்ச் மேக்ஸ் ஸ்மார்ட் டிவியின் "மேம்படுத்தப்பட்ட" பதிப்பாகும். அப்கிரேடட் வெர்ஷனாக (Upgraded Version) இருந்தால் இதன் டிஸ்பிளே பெரிதாக தானே இருக்க வேண்டும், இது ஏன் சற்றே சிறிய டிஸ்பிளேவுடன் வெளியானது என்று நீங்கள் கேட்டால்.. அது மிகவும் நியாயமான கேள்வி தான்!

90-இன்ச் 4K Smart TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

ரெட்மியின் 100-இன்ச் மேக்ஸ் ஸ்மார்ட் டிவியானது மிகவும் பெரியதாக இருந்தது. உயரமான கட்டிடங்களில் வசிக்கும் உரிமையாளர்கள் அதை தங்கள் வீடுகளுக்குள் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இருப்பினும் இந்த ஸ்மார்ட் டிவி நல்ல முறையிலேயே விற்பனையானது; பிரபலமான டிவியாகவும் திகழ்கிறது.

இதெல்லாம் மனதிற்கொண்டு தான் ரெட்மி நிறுவனம், சற்றே சிறிய 90-இன்ச் மேக்ஸ் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு ஸ்பெஷல் ஷேப்டு பேக்கிங் டிஸைனுடன் (Special shaped packaging design) வருகிறது. இதை லிஃப்டில் குறுக்காக வைக்க முடியும் என்பதால் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு இதை எளிதாக கொண்டுசெல்ல முடியம்.

அம்சங்களை பொறுத்தவரை, இந்த ரெட்மி டிவியின் 4கே டிஸ்பிளேவானது 100-லெவல் பார்ட்டிஷன் பேக்லைட் மற்றும் 4096-லெவல் ப்ரெஸிஷன் டிம்மிங்கை ஆதரிக்கிறது. மேலும் இதன் 90-இன்ச் டிஸ்பிளேவானது இ-ஸ்போர்ட்ஸ் லெவல் 144ஹெர்ட்ஸ் அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.

மேலும் இந்த டிவி எச்டிஎம்ஐ 2.1 நெக்ஸ்ட் ஜென் கேம் இன்டர்பேஸுடன் (Next-generation game interface) பொருத்தப்பட்டுள்ளது. இது வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable refresh rate - VRR) மற்றும் ஆட்டோமெட்டிக் லோ லேடன்ஸி (Automatic low latency - ALLM) ஆகியவற்றை ஆதரிக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் பனோரமிக் சவுண்டை உணரக்கூடிய 30W ஹை-பவர் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. குவாட் கோர் ஏ73 ப்ராசசர் உடன் வரும் இந்த டிவி 3ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இதில் 32ஜிபி கிடைக்கும்.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, வேகமான நெட்வொர்க் வேகம் மற்றும் லோ லேன்டன்ஸிக்கான வைஃபை 6 (Wi-Fi 6) உடன் வருகிறது. எச்டிஎம்ஐ 2.1 போர்ட்டை தவிர, இந்த டிவியில் எச்டிஎம்ஐ 2.0, யூஎஸ்பி 3.0, யூஎஸ்பி 2.0, நெட்வொர்க் கேபிள் போர்ட் மற்றும் ஏவி இன்புட் மற்றும் பல உள்ளன.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரெட்மி மேக்ஸ் 90 இன்ச் ஸ்மார்ட் டிவியானது தற்போது வரையிலாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.94,560 க்கு ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Launched New Max 90 inch 4K Smart TV with 144Hz Refresh Rate Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X