Redmi உள்ள வந்துட்டான்.. ஆடிப்போன ஆடியோ மார்க்கெட்.. 72 மணி நேர பேட்டரி.. முதல் Over-Ear ஹெட்போன் அறிமுகம்!
ரெட்மி (Redmi) நிறுவனம் தனது முதல் 'ஓவர்-இயர்' (over-ear) வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹெட்போன் துறையிலும் களமிறங்கி உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்போன்ஸ் ஆனது 42dB வரையிலான 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' (Active noise cancellation - ANC) வசதியை கொண்டுள்ளன.
இந்த ஹெட்போன்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 72 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இவை ஹை-ரெஸ் (Hi-Res) ஆடியோ மற்றும் யுஎஸ்பி (USB) ஆடியோ பிளேபேக் ஆகியவற்றையும் ஆதரிக்கின்றன. இந்த மாடல் ஷாவ்மீயின் ஹைப்பர்கனெக்ட் (Xiaomi HyperConnect) அம்சங்களையும் ஆதரிப்பதுடன், மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ்-ன் விலை: சீனாவில் இந்த ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ்-ன் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.4,900 ஆகும். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட காலத்திற்கு இது சுமார் ரூ.4,100 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ் ஆனது ஜாஸ் ப்ளூ (Jazz Blue), ராக் பிளாக் (Rock Black) மற்றும் சிம்பொனி ஒயிட் (Symphony White) ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன்கள் ஏற்கனவே சீனாவிற்கான ஷாவ்மீ இணையதளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்துவது குறித்த ரெட்மி நிறுவனம் எந்த திட்டத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை.
ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ் முக்கிய அம்சங்கள்:
- ஒரு தனித்துவமான ஒலி அறையில் (acoustic chamber) அமைக்கப்பட்ட 40மிமீ டைட்டானியம் பூசப்பட்ட டைனமிக் டிரைவர்கள்
- 96kHz மற்றும் 24-பிட் வரையிலான 'லாஸ்லெஸ்' (lossless) தரத்திலான USB ஆடியோ பிளேபேக் ஆதரவு
- Hi-Res Audio சான்றிழ்
- நான்கு ப்ரீசெட் EQ (ஈக்வலைசர்) மோட்கள் மற்றும் 10-பேண்ட் கஸ்டம் ஈக்வலைசர் வசதி
- Deep (ஆழ்ந்த), Balanced (சீரான) மற்றும் Light (லேசான) ஆகிய மோட்களுடன் 42dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி
-அடாப்டிவ் ANC மற்றும் 5 மீ/வி வேகம் வரையிலான காற்று இரைச்சலை குறைக்கும் திறன் கொண்ட த்ரீ-மைக்ரோஃபோன் AI காலிங் சிஸ்டம்
- ப்ளூடூத் ஆதரவு
- ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்கும் (dual-device pairing) ஆதரவு
- குவிக் பேரிங் (quick pairing)
- துல்லியமான டிவைஸ் கண்டறிதல் மற்றும் இணக்கமான டிவைஸ்களுக்கு இடையே ஆடியோவை மாற்றுதல் உள்ளிட்ட Xiaomi HyperConnect அம்சங்கள்
- 600mAh பேட்டரி
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 72 மணிநேரம் வரை இயங்கும் திறன்
- வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் ஐந்து மணிநேரம் வரை பிளேடைம்
- சுமார் 263 கிராம் எடை
- மடிக்கக்கூடிய வடிவமைப்பு
- இயர் குஷன்கள் (ear cushions) 'புரோட்டீன் லெதர்' மற்றும் 'ஸ்லோ-ரீபவுண்ட் ஃபோம்' (slow-rebound foam) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன
- இயர்கப்கள் (earcups) 110 டிகிரி வரை சுழலும் மற்றும் 15 டிகிரி வரை சாயும் தன்மை கொண்டவை
- நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் வசதியாக இருக்கும் வகையில் சரிசெய்யக்கூடிய மெட்டல் ஹெட்-பேண்ட் வடிவமைப்பு
இந்த ஹெட்போன்ஸ் உடன் சேர்த்து சீனாவில், பில்ட்-இன் கூலிங் ஃபேனுடன் (cooling fan) கூடிய, செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) ஸ்மார்ட்போனுடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8,550mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.41,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு ரெட்மி கே90 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீடு குறித்த எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications