சும்மா அதிருதா.. 72 மணிநேர பேட்டரி, 42dB ANC, யுஎஸ்பி டைப்-சி உடன் புது REDMI ஹெட்போன்ஸ் அறிமுகம்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம், அதன் ரெட்மி ஹெட்ஃபோன்ஸ் நியோ (Redmi Headphones Neo) மாடலின் விற்பனையை அமைதியான முறையில் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், ரெட்மி நிறுவனத்தின் இந்த புதிய ஓவர்-இயர் ஹெட்ஃபோன்ஸ் (Over-ear headphones) ஆனது ஜப்பானுக்கு வெளியே உள்ள பல சந்தைகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரெட்மி ஹெட்ஃபோன்ஸ் நியோ மாடல் ஆனது - இப்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பட்டியலிடப்பட்டு உள்ளது (இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை). இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஹெட்போன்ஸின் விலை ஆனது - நேரடியாகவே - குறைந்த விலை பட்ஜெட் பிரிவை இலக்காகக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் - மேலோட்டமாக பார்க்கும்போது, இதன் விலை குறிப்பிடுவதை விட, இதன் அம்சங்கள் மிகவும் பிரம்மாண்டமாக தெரிகின்றன.

என்னென்ன அம்சங்கள்? ரெட்மி ஹெட்ஃபோன்ஸ் நியோ மாடலில் 40மிமீ டைட்டானியம் கோட்டிங் டிரைவர்களை பயன்படுத்துகின்றன மற்றும் கேபிள் வழியாக இணைக்கப்படும்போது ஹை-ரெஸ் ஆடியோவை ஆதரிக்கின்றன. ப்ளூடூத் 5.4 மூலம் ப்ளூடூத் பிளேபேக் கையாளப்படுகிறது, மேலும் பயனர்கள் ஒவ்வொரு முறையும் மீண்டும் இணைக்க தேவையில்லாமல், இணைக்கப்பட்ட இரண்டு டிவைஸ்களுக்கு இடையில் மாறும் வசதியையும் ஆதரிக்கிறது
லேடன்சி (latency) ஒரு முக்கிய காரணியாக இருக்கும் சூழ்நிலைகளுக்காக, ஷாவ்மீ நிறுவனம் இதற்கு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ ஆதரவையும் (USB Type-C audio support) சேர்த்து உள்ளது. இது கேமிங், வீடியோ எடிட்டிங் மற்றும் பிற நிகழ்நேர பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரெட்மி ஹெட்ஃபோன்ஸ் நியோ மாடலானது, சுற்றுப்புற இரைச்சலை 42dB வரை குறைக்கும் என்றும், இதென்ன த்ரீ மைக்ரோஃபோன் அமைப்பு போன் கால்களின் போது பின்னணி ஒலிகளை பில்டர் செய்ய உதவும் என்றும் ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது. காற்றின் இரைச்சலை குறைக்கும் வசதியும் இதில் உள்ளது, இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பேட்டரி லைஃப்பும் நம்பிக்கையளிப்பதாக தெரிகிறது. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏஎன்சி முடக்கப்பட்ட நிலையில் இதன் 600mAh பேட்டரி மூலம் 72 மணிநேரம் வரை பிளேபேக் கிடைக்கும். இருப்பினும், ஒலியளவு மற்றும் பயன்பாட்டு முறைகளை பொறுத்து உண்மையான பயன்பாட்டு நேரம் சற்று மாறுபடும். 10 நிமிட குவிக் சார்ஜ் மூலம் சுமார் ஐந்து மணிநேரம் கேட்கும் நேரத்தை பெறலாம் என்றும் ஷாவ்மீ கூறுகிறது.
இந்த ஹெட்ஃபோன்கள் 263 கிராம் எடை கொண்டவையாக உள்ளது. மேலும், இதில் ப்ரோடீன் லெட்டர் இயர் குஷன்களும், சரிசெய்யக்கூடிய ஹெட் பேண்டும் உள்ளன. அறிமுகத்தின் போது இந்த மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் சாண்ட் ஒயிட் ஆகிய ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மிஸ்ட் ப்ளூ எடிஷன் பின்னர் வரும் என்றும் சில அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன, ஆனால் ஷாவ்மீ நிறுவனம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆடியோ செட்டிங்ஸ்-ஐ மாற்றியமைக்க விரும்புபவர்களுக்காக, சியோமி இயர்பட்ஸ் ஆப்பில் ஐந்து இக்யூ ப்ரீசெட்கள் (EQ Presets) உள்ளன. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஃபாஸ்ட் பேர் ஆதரவும் (Fast Pair Support) கிடைக்கிறது, இது ஆரம்பகட்ட செட்டப் செயல்முறையை (Setup Process) சற்று எளிதாக்குகிறது.
என்ன விலை? இதன் விலை சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது. ரெட்மி ஹெட்ஃபோன்ஸ் நியோ மலேசியாவில் RM 239 க்கும் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.5750) , தாய்லாந்தில் THB 1,990 க்கும் (தோராயமாக ரூ.5800), ஆஸ்திரேலியாவில் AUD 109 க்கும் (சுமார் ரூ.7500), தென் கொரியாவில் KRW 72,800 க்கும் (தோராயமாக ரூ.4600) மற்றும் ஸ்வீடனில் SEK 799 க்கும் (சுமார் ரூ.8200) விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அறிமுகம், விற்பனை மற்றும் விலை குறித்த விவரங்கள் இல்லை. இந்திய அறிமுகம் குறித்த தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications