அதிர விடும் அமேசான்.. 8GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ரெட்மி டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டள்ளது. அதாவது 32-இன்ச் கொண்ட ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவிக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 32-இன்ச் கொண்ட ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவிக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.11,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1,999 தள்ளுபடியும் உள்ளது.

எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
32 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள்: 1366×768 பிக்சல்கள், 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 96.9 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேசியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி.
குறிப்பாக 32 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் இது மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன் கொண்ட டிவியாகும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட் கொண்டு இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) மூலம் இந்த டிவி இயங்குகிறது. அதேபோல் இந்த டிவியில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
1 ஜிபி ரேம் + 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான 32 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இந்த ரிமோட்டில் அலெக்சா (Alexa), பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Controls), சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகியவற்றின் சார்ட்கட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) ஆதரவுகொண்ட 10W ஸ்பீக்கர்கள் (2 ஸ்பீக்கர்கள்) கொண்டு இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

32 இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியில்ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0, வை-பை 802.11 ஏசி போன்ற கனெக்டிவிட்டி இருக்கிறது. அதோடு ஒரு எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எதர்நெட் (Ethernet), ஆன்டெனா (Antenna) உடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ரெட்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








