Home
Gadgets

பின்றானே இவன்.. சிங்கிள் சார்ஜில் 32 மணி நேர பிளேபேக்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. AI நாய்ஸ் ரெடக்சன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் பிரீமியம் ஆடியோ பீச்சர்களை கொண்ட மாடலாக ரெட்மி கிளிப் நியோ (REDMI Clip Neo) களமிறங்கி இருக்கிறது. கிளிப்-ஆன் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. சிங்கிள் சார்ஜில் 32 மணி நேர பிளேபேக், டூயல் டைனாமிக் டிரைவர்கள், பேஸ் காம்பென்சேஷன் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ரெட்மி கே100 (REDMI K100) ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி கிளிப் நியோ வெளியாகின. இதில் ரெட்மி கிளிப் நியோ கிளிப்-ஆன் டிசைனை கொடுப்பதால், ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது. டிராக்-ஷேப்டு சி-பிரிட்ஜ் (Track-shaped C-bridge) மற்றும் டியர்டிராப்-ஷேப்டு அகஸ்டிக் ஸ்பியர் (Teardrop-shaped Acoustic Sphere) உள்ளது.

பின்றானே இவன்.. சிங்கிள் சார்ஜில் 32 மணி நேர பிளேபேக்.. எந்த மாடல்?

3.4 எம்எம் கிளாம்பிங் கேப் கிடைப்பதால், எளிதாக காதுகளுக்கு செட்டாகும்படி இருக்கிறது. லைட் வெயிட்டாகவும் இருக்கிறது. ஏனென்றால், 5.3 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. லிக்விட் சிலிகான் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஸ்கின்னுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காது. சார்ஜிங் கேஸில் கிளாவுட்-கேப் லைட் எபெக்ட் 2.0 (Cloud-Gap Light Effect 2.0) கிடைக்கிறது.

டூயல் மேக்னட்டிக் டைனாமிக் டிரைவர்கள் (Dual-magnetic Dynamic Drivers) மற்றும் என்52 நியோடைமியம் மேக்னட்கள் (Dual N52 Neodymium Magnets) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பேஸ் கான்பெஷ்சேஷன் (Bass Compensation) கிடைக்கிறது. ஆகவே, ரியல் டைம் அல்கோரிதம் அட்ஜெட்ஸ் பேஸ் கெயின் கிடைக்கும். அதாவது, ரியல் டைமுக்கு ஏற்ப பேஸ் மாடிபிகேஷன் கிடைக்கும்.

ரெட்மி கிளிப் நியோ அம்சங்கள் (REDMI Clip Neo Specifications): இதுவொரு கிளிப்-ஆன் ஓப்பன்-இயர் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடலாக இருக்கிறது. 12 எம்எம் டூயல்-மேக்னட்டிக் டைனாமிக் டிரைவர்களுடன் கிடைக்கிறதுய 5.3 கிராம் எடையில் ஒவ்வொரு பட்களும் இருக்கின்றன. சார்ஜிங் கேஸ் 45 கிராம் எடை (பட்களுடன் சேர்த்து) கொடுத்து இருக்கிறது.

ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC) போன்ற ஆடியோ கோடெக்குகள் வருகின்றன. 10 மீட்டர் ரேஞ்ச் கொடுக்கிறது. பேக் காம்பென்சேஷன் மட்டுமல்லாமல், 4 ஈகியூ மோட்கள் (EQ Modes) 10 பேண்ட் கஸ்டம் ஈகியூ (Band Custom EQ) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

ஒரு பட்டில் 46mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரெட்மி கிளிப் நியோ மாடலின் சார்ஜிங் கேஸில் 520mAh பேட்டரி கிடைக்கிறது. 7 மணி நேரங்களுக்கு பட்களில் பேக்கப் கிடைக்கும். 32 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸில் பேக்கப் கிடைக்கும். யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ரெட்மி கிளிப் நியோ மாடலின் விலை 399 யுவானாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.5,692 ஆக விலை இருக்கிறது. பிளாக் (Black) ஒயிட் (White) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சீனா மார்கெட்டில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. குளோபல் மற்றும் இந்தியா உள்ளிட்ட மற்ற மார்கெட்களில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
REDMI Clip Neo With 32h Playback 12mm Dual Drivers Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X