Home
Gadgets

REDMI சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 36 மணி நேர பிளேபேக்.. 42dB ஏஎன்சி.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரெட்மி ஆடியோ பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பீச்சர்களுடன் ரெட்மி பட்ஸ் 8 லைட் (REDMI Buds 8 Lite) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிங்கிள் சார்ஜில் 36 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுப்பது மட்டுமல்லாமல், 42dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டூயல் மைக்குகள், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. இந்த ரெட்மி பட்ஸ் 8 லைட் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குளோபல் மார்கெட்டில் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் (REDMI Note 15 Pro Series) மாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி பட்ஸ் 8 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஓரிரு மாதங்களில் இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, இப்போதே இந்த ரெட்மி பட்ஸ் 8 லைட் மாடலுக்கு எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

REDMI சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 36 மணி நேர பிளேபேக்.. மாடல்?

ஏனென்றால், ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) கொண்டுள்ளது. மேலும், டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) கொடுத்துள்ளது. ஏஐ என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) கிடைப்பதால், வாய்ஸ் கால்களிலும் கிரிஸ்டல் கிளயர் அவுட்புட் கொடுத்து உள்ளது. ஏஎன்சி இருந்தாலும், பிளேபேக் அதிகமாக உள்ளது.

ரெட்மி பட்ஸ் 8 லைட் அம்சங்கள் (REDMI Buds 8 Lite Specifications): 12.4 எம்எம் டைட்டானியம் டிரைவர்களை இந்த ரெட்மி பட்ஸ் 8 லைட் கொண்டுள்ளது. மேலும், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியுடன் கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) கொடுக்கிறது. டூயல் கனெக்டிவிட்டி (Dual Connetivity) கிடைத்துள்ளது. எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC) கோடெக் கிடைக்கின்றன.

42dB நாய்ஸ் ரெடக்சன் டெப்த் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைத்துள்ளது. ஆகவே, ஆடியோ குவாலிட்டி பிரீமியமாக இருக்கும். மேலும், வாய்ஸ் கால்களிலும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க ஏஐ நாய்ஸ் ரெடக்சன் கொண்ட டூயல் மைக்குகள் கிடைக்கின்றன. ஆடியோ டியூனிங் கொடுக்க 5 ஈகியூ மோட்களை (5 EQ Modes) இந்த மாடல் கொடுத்துள்ளது.

ஆகவே, ஸ்டான்டர்டு (Standard), என்ஹான்ஸ் டிரெபிள் (Enhance Treble), என்ஹான்ஸ் பேஸ் (Enhance Bass), என்ஹான்ஸ் வாய்ஸ் (Enhance Voice) மற்றும் வால்யூம் பூஸ்ட் (Volume Boost) கொடுத்துள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் இந்த ரெட்மி பட்ஸ் 5 மாடலுக்கு கிடைத்துள்ளது. ஸ்மார்ட் டேப் கன்ட்ரோல் (Smart Tap Control) செய்து கொள்ளலாம்.

சியோமி இயர்பட்ஸ் ஆப் (Xiaomi Earbuds App) சப்போர்ட் கொண்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் இயர்பட்களில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், சார்ஜிங் கேஸ் வழியாக 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி மோடில் பயன்படுத்தினால், 36 மணி நேரத்தைவிட கொஞ்சம் குறைவாக பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது.

ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 2 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. குளோபல் மார்கெட்டில் ரூ.2,405ஆக விலை இருக்கிறது. இந்தியாவில் வெளியானால், ரூ.2,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். இதிலேயே பெரும்பாலான பீச்சர்கள் கொடுக்கப்பட்டுவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Buds 8 Lite With 36 Hours Battery Life 42dB Active Noise Cancellation Launched Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X