Home
Gadgets

மிரளவிடும் பட்ஸ்.. பட்ஜெட்ல FAST பேர்.. DUAL கனெக்டிவிட்டி.. BASS பூஸ்ட்.. AI நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?

ரெட்மி பிரியர்கள் மிரளும் விதமாக பட்ஜெட்டில் ஃபாஸ்ட் பேரிங், டூயல் கனெக்டிவிட்டி, பேஸ் பூஸ்ட், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், ஈகியூ எஃபெக்ட்ஸ், ஆப் அப்டேட் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) அறிமுகமாகி இருக்கிறது.

ரெட்மி பட்ஸ் 5 அம்சங்கள் (Redmi Buds 5 Specifications): இந்த ரெட்மி மாடலானது, எர்கோனாமிக் இன்-இயர் டிசைன் (Ergonomic in-ear Design) கொண்டிருக்கிறது. அதோடு குளோசி நானோ கோடெட் டெக்ரேடிவ் ஸ்ட்ரிப்ஸ் (Glossy Nano Coated Decorative Strips) வருகிறது. 12.4மிமீ டிரைவர்கள் (Drivers) வருகின்றன.

DUAL கனெக்டிவிட்டி.. BASS பூஸ்ட்.. AI நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?

ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி வருகிறது. எஸ்பிசி (SBC), ஏஏசி கோடெக்ஸ் (AAC Codecs) சப்போர்ட் கொண்டுள்ளது. மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்வதற்காக கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதேபோல டூயல் டிவைஸ் ஸ்மார்ட் கனெக்சன் (Dual Device Smart Connection) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். ஈகியூ சவுண்ட் எஃபெக்ட்ஸ் (EQ Sound Effects), வோகல் என்ஹான்ஸ்மென்ட் (Vocal Enhancement) கொண்டுள்ளது.

அதோடு டிரிபிள் பூஸ்ட் (Treble Boost) மற்றும் பேஸ் பூஸ்ட் (Bass Boost) சப்போர்ட் வருகிறது. ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) கொண்ட டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகின்றன. அதேபோல ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) இருக்கிறது.

இதன் மூலம் 46dB வரையில் நாய்ஸ் ரெடக்சன் டெப்த் கிடைக்கும். இதில் லைட் (Light), பேலன்ஸ்ட் (Balanced) மற்றும் டீப் (Deep) போன்ற ஆப்ஷன்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ரெகுலர் (Regular), என்ஹான்ஸ்ட் வாய்ஸ் (Enhanced Voice), என்ஹான்ஸ் ஆம்பியன்ட் சவுண்ட் (Enhance Ambient Sound) போன்ற டிரான்பரென்சி மோட்கள் (Transparency Modes) இருக்கின்றன.

இந்த ரெட்மி பட்ஸ் 5 மாடலில் 8 விதமான கஸ்சமைசபிள் கெஸ்சர் கன்ட்ரோல் (Customizable Gesture Controls) வருகின்றன. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது. சார்ஜிங் கேஸ் (Charging Case) 42.47 கிராம் எடை கொண்டிருக்கிறது. இயர்பட்கள் 10.25 கிராம் எடை வருகிறது.

ஆகவே, லைட் வெயிட்டில் காதுகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு, இந்த ரெட்மி பட்ஸ் 5 மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு ஆப் சப்போர்ட் (App Support) வருகிறது. இதன் மூலம் கஸ்டமைசேஷன் மற்றும் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம். சியோமி ஹெட்போன்ஸ் ஆப் (Xiaomi Headphones App) சப்போர்ட் உள்ளது.

இந்த மாடலுக்கு டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் (Type-C Fast Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 2 மணி நேரங்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். அதேபோல 40 மணி நேரம் கேஸ் சார்ஜிங், 10 மணி நேரம் பட்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

அதுவே, நாய்ஸ் ரெடக்சன் மோடில் (Noise Reduction Mode) 8 மணி நேரத்துக்கு பயன்படுத்தலாம். இந்த ரெட்மி பட்ஸ் 5 மாடலில் ப்யூசன் ஒயிட் (Fusion White), ப்யூசன் பர்பிள் (Fusion Purple), பியூசன் பிளாக் (Fusion Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் விலை ரூ.2,999ஆக இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Buds 5 Launched Under Rs 3000 Sale From February 20 in Amazon India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X