Redmi நிறுவனத்தின் தரமான சம்பவம்: கம்மி விலையில் ரெட்மி பட்ஸ் 3 லைட் அறிமுகம்.!
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து சூப்பரான ஸ்மார்ட்போன்,ஸ்மார்ட் டிவி போன்ற பல சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து கேஜெட்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன.

ரெட்மி பட்ஸ் 3 லைட்
இந்நிலையில் புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்த புதிய இயர்பட்ஸ் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது புதிய ரெட்மி இயர்பட்ஸ் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசத்தலான வடிவமைப்பு
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய இயர்பட்ஸ் ஆனது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இன் இயர் டிசனை கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடல்.

6எம்.எம் டிரைவர்கள்
ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடலில் 6எம்.எம் டிரைவர்கள் இடம்பெற்று உள்ளன. எனவே இது ஒரு தனித்துவமான ஆடியோ அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

நாய்ஸ் கேன்சலேசன்
புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவும் உள்ளது. மேலும் டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், நாய்ஸ் கேன்சலேசன் போன்ற சிறப்பான அம்சங்களையும் வழங்குகிறது இந்த அட்டகாசமான ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடல்.

சூப்பரான பேட்டரி
குறிப்பாக 18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி இயர்பட்ஸ். இதுதவிர பல அட்டகாசமான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி பட்ஸ் 3 லைட் விலை
புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடல் ஆனது வரும் ஜூலை 31-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் இந்த இயர்பட்ஸ் வாங்கினால் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ரெட்மி பட்ஸ் 3 லைட் கருப்பு நிறத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்தஇயர்பட்ஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி
அதேபோல் இந்நிறுவனம் விரைவில் ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி (Redmi 10 Prime+ 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தரமான சிப்செட்
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி,ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றுகூறப்படுகிறது.

யுஎஸ்பி டைப்-சி போர்ட்
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications