Home
Gadgets

பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்

ரெட்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட் கலர் டிஸ்பிளே, ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி, இதய துடிப்பு சென்சார் உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் என பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்

அன்மையில் வெளிவந்த ஹூவாய் பேண்ட் 4 மற்றும் ஹானர் பேண்ட் 5ஐ சாதனங்களை போன்று புதிய ரெட்மி பேண்ட் சாதனத்திலும் யுஎஸ்பி பிளக் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்பு இதில்
டையல் ஃபேஸ் ஆப்ஷன்கள் நான்கு ரிஸ்ட்பேண்ட் வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரெட்மி பேண்ட் ஆனது விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய வெளியீடு பற்றி விரைவில் தகவல்
வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்

இந்த புதிய ரெட்மி பேண்ட் ஆனது 1.08-இன்ச் அங்குல கலர் டிஸ்பிளே, ஐந்து ஸ்போர்ட்ஸ் மோட்கள்,ஆப்டிகல் இதயதுடிப்பு சென்சார் போன்ற பல்வேறு சென்சார்களை கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ரெட்மி பேண்டில் 70-க்கும் அதிகமான பிரத்யேக டையல் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பு இதனுடன் நான்கு வித ரிஸ்பேண்ட் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

இந்த யுஎஸ்பி கனெக்டர் கொண்டிருக்கும் ரெட்மி பேண்ட் பில்ட் இன் பேட்டரி மூலம் 14நாட்களுக்கு பேக்கப் வழங்கும் எனவும், ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருப்பதால் ரெட்மி மற்றும் எம்.ஐ தவிர மற்ற மாடல்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான ரெட்மி பேண்ட் அறிமுகம்

குறிப்பாக இந்த புதிய ரெட்மி பேண்ட் விலை CNY 99 (இந்திய மதிப்பில் ரூ. 1100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi Band With Colour Display, Integrated USB Plug Launched And Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X