Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.!
உலகம் முழுக்க TWS இயர்போன்ஸ் மீதான மோகம் அதிகரித்துள்ளது. நெக்பேண்ட் இய்ரபோன்ஸ் மாடல் மற்றும் ஹெட்செட் இய்ரபோன்ஸ் மாடல்களை விட இப்போது மக்கள் அதிகம் இந்த TWS இயர்போன்ஸ் மாடல்களையே வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை நன்கு உணர்ந்த நிறுவனங்கள் இப்போது குறைந்த விலையில் TWS இயர்போன்ஸ் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது, ரெட்மி நிறுவனம் ஒன்று Redmi AirDots 3 என்ற புதிய TWS இயர்போன்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கே 40 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் 3 TWS இயர்போன்ஸ் மாடலின் சிறப்பம்சம், விலை மற்றும் முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரெட்மி ஏர்டாட்ஸ் 3 TWS இயர்போன்ஸ் சாதனம் டச் கண்ட்ரோல் மற்றும் நான்-ஸ்டெம் (Non-stem) டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மாக்னோலியா வைட், பிங்க் மற்றும் ஸ்டார்ரி ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் CNY 199 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 2,300 ஆகும். இந்தியாவில் இது எப்போது அறிமுகமாகும் என்று உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ரெட்மி ஏர்டாட்ஸ் 3 TWS இயர்போன்ஸ் சாதனம் குவால்காம் QCC3040 சிப்செட் உடன் 5.2 ப்ளூடூத் அம்சத்துடன் வருகிறது. ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, aptX அடாப்டிவ் கோடெக், டச் கண்ட்ரோல் மற்றும் அட்டகாசமான சவுண்ட் அம்சத்துடன் வருகிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட், வாய்ஸ் கால் டச் ரெஸ்பான்ஸ் போன்று பல அம்சங்கள் இதில் உள்ளது.

ரெட்மி ஏர்டாட்ஸ் 3 TWS இயர்போன்ஸ் சாதனத்தின் இயர்பட்ஸ்கள் 43 எம்ஏஎச் பேட்டரி உடனும், இதன் சார்ஜிங் கேஸ் 600 எம்ஏஎச் பேட்டரி உடனும் வருகிறது. புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் 3 TWS இயர்போன்ஸ் சாதனம் 7 மணிநேரம் நீடித்து நிலைக்கு பேட்டரி பிளேபேக் நேரத்தைக் கொண்டுள்ளது. இயர்பட்ஸ்கள் முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. அதேபோல் சார்ஜிங் கேஸ் முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.


Click it and Unblock the Notifications