அமேசான் சிறப்பு விற்பனை.. ஆஃபரில் ரெட்மி 4K ஸ்மார்ட் டிவி.. டால்பி ஆடியோ.. 24W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தளத்தில் Prime Day Early Deal எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி (Redmi 43 inch F Series Ultra HD 4K LED Smart Fire TV) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவிக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Redmi 43 inch F Series 4K Smart Fire TV Specifications): டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
அதேபோல் 4கே டிஸ்பிளே (4K display) உடன் இந்த ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
தனித்துவமான விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடலில் உள்ளன.
குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
தரமான ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல் இயங்கும். பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
குறிப்பாக வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.
வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








