Home
Gadgets

கெஞ்சி கேட்டாலும் ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டாங்க! ஆனா இப்ப ரூ.5,999 விலையில் Redmi டிவி.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 32-இனச் ஸ்மாரட் டிவி ஆனது பிளிப்கார்ட் தளத்தில் 76 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ரெட்மி டிவி டால்பி ஆடியோ, பெசல் லெஸ் டிசைன், தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ரெட்மி டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் L32MA- FVIN மாடல் நம்பர் கொண்ட ரெட்மி 32 இன்ச் எச்டி ஃபயர் டிவி (Redmi 32 inch Smart Fire TV) மாடலுக்கு 76 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை மலிவு விலையில் வாங்கிவிட முடியும்.

ரூ.5,999 விலையில் Redmi  ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ரெட்மி 32 இனச் ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi 32 inch Smart Fire TV Specifications): 32 இன்ச் எச்டி-ரெடி டிஸ்பிளே (HD-Ready Display) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 1366 × 768 பிக்சல்கள், 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இதன் மூலம் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad-core Cortex A35) சிப்செட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும்ஃபயர் டிவி ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் 12000 ஆப்கள் சப்போர்ட் கிடைக்கிறது. அதுவும் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இதில் உள்ளது.

இந்த டிவி ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) கொண்டிருக்கிறது. எனவே இது தரமான வீடியோ குவாலிட்டி கொடுக்கும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ரெட்மி டிவியில் உள்ளது. அதேபோல மிராகாஸ்ட் (Miracast), ஏர்பிளே (AirPlay) போன்ற ஸ்கிரீன் காஸ்டிங் (Screen Casting) ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன.

ரூ.5,999 விலையில் Redmi  ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட்ரிமோட் ஆதரவும் இந்த டிவியுடன் வருகிறது.

வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் (USB Port), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஈதர்நெட் (Ethernet) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 32 inch Smart TV with Dolby Audio now available at 75 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X