Home
Gadgets

மொத்த மார்கெட் மிரளுது.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 8200mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த டேப்லெட்?

கேமிங் டேப்லெட் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி ஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா ஆடியோ மற்றும் கியூப் கேம் என்ஜின் போன்ற பீச்சர்களுடன் ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் 3 ப்ரோ (REDMAGIC Gaming Tablet 3 Pro) வெளியாகி இருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 8200mAh பேட்டரி, 13 எம்பி கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் 3 ப்ரோ டேப்லெட்டின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் டேப்லெட் மாடல்களில் மட்டுமே ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்களில் பிரீமியம் மாடல்களில் கூட பெரும்பாலும் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்காது. அதேபோல 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கொண்ட டேப்லெட்கள் மிகவும் அரிதாகவே வெளியாகின்றன. ஆனால், இந்த பீச்சர்களுடன் ஒரு புது டேப்லெட் வந்திருக்கிறது.

மொத்த மார்கெட் மிரளுது.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 8200mAh பேட்டரி!

ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் 3 ப்ரோ டேப்லெட்டானது, பர்ஃபாமென்ஸ் பக்கம் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆனால், பேட்டரியில் அதிக கேபாசிட்டி எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், ஃபாஸ்ட் சார்ஜிங் அதிகமாக கிடைப்பதால் 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் 3 ப்ரோ அம்சங்கள் (REDMAGIC Gaming Tablet 3 Pro Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரெட்மேஜிக் ஓஎஸ் 10.5 (REDMAGIC OS 10.5) கிடைக்கிறது. பிரீமியம கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (3nm Octa Core Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.

இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு, மோரா ஏஐ அசிஸ்டன்ட் 2.0 (MORA AI Assistant 2.0) கிடைக்கிறது. இதுபோக கியூப் கேம் என்ஜின் (CUBE Game Engine) மற்றும் மேஜிக் கூலிங் சிஸ்டம் 3.0 (Magic Cooling System) கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் மட்டுமல்லாமல், பிரத்யேக கேமிங் சிப்செட் வருகிறது.

மொத்த மார்கெட் மிரளுது.. 24GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 8200mAh பேட்டரி!

ஆகவே, ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போலவே ரெட் கோர் ஆ3 ப்ரோ (Red Core R3 Pro) கேமிங் சிப்செட் கிடைக்கிறது. இந்த ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் 3 ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும்படி 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8200mAh பேட்டரி கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா ஆடியோ மற்றும் பவர் பட்டன் சப்போர்ட் கிடைக்கிறது. 6.9 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது.

கேமிங் கன்சோல் அட்டாச்மெண்ட் சப்போர்ட் உள்ளது. 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.449,966ஆகவும், 16 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.55,871ஆகவும், 24 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.71,357ஆகவும் உள்ளது. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் விரைவில் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMAGIC Gaming Tablet 3 Pro With 24GB RAM 8200mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X