Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 20 நாட்களுக்கு பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும் பீச்சர்களை அதைவிட மலிவான விலைக்கு கொடுக்கும்படி ரியல்மி வாட்ச் எஸ்5 (realme Watch S5) களமிறங்கி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங், பாண்டா கிளாஸ் உள்ளிட்ட பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் ரியல்மி 16டி (realme 16T) ஸ்மார்ட்போன் வெளியாகியது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ (realme Buds Air8 Pro) மற்றும் ரியல்மி வாட்ச் எஸ்5 (realme Watch S5) மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதில் பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக ரியல்மி வாட்ச் எஸ்5 ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் 20 நாட்களுக்கு பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. மாடல்?

ஏனென்றால், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. இதில் 5 குளோபல் சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கிறது. ஆட்டோ வொர்க்அவுட் டிடெக்சன் மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் கிடைக்கிறது. விஓ2 மேக்ஸ் டிராக்கிங் கொண்டுள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து இருக்கிறது. முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலைக்கு செல்லலாம்.

ரியல்மி வாட்ச் எஸ்5 அம்சங்கள் (realme Watch S5 Specifications): 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 302 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஓடி (AOD) மற்றும் ஸ்மார்ட் நைட் விஷன் (Smart Night Vision) சப்போர்ட் கொடுத்துள்ளது.

பாண்டா கிளாஸ் (Panda Glass) கொடுத்துள்ளது. அலுமினியம் அலாய் டயல் (Aluminum Alloy Dial) கிடைக்கிறது. பிளாஸ்டிக் பிவிடி பாட்டம் ஷெல் உள்ளது. ரேட்டேஷ்னல் கிரவுண் மற்றும் டூயல் கன்ட்ரோல் பட்டன்களை கொடுத்து இருக்கிறது. ஆகவே, ஃபிங்கர்டிப்பில் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். மொத்தமாக 49.63 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

ஓரளவுக்கு லைட் வெயிட் மாடலாக இருக்கிறது. ராக்கி கிரே (Rock Grey) மற்றும் சாண்ட் ஒயிட் (Sand White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. சிலிகான் ஸ்ட்ராப் கொடுத்துள்ளது. 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி வாட்ச் எஸ்5 இருக்கிறது. ஆகவே, ஸ்விம்மிங் ஃப்ரூப் கிடைக்கிறது. ஏடிஎஸ்3089 (ATS3089) சிப்செட் கிடைக்கிறது.

எம்பி3 சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங், ப்ளூடூத் இன்டர்காம் கிடைக்கிறது. இன்டிபென்டென்ட் ஜிபிஎஸ் மற்றும் 5 சாட்டிலைட் சிஸ்டம் கிடைக்கிறது. 460mAh பேட்டரி கொடுத்துள்ளது. இந்த பேட்டரியில் 20 நாட்களுக்கு பேக்கப் (லைட் ஸ்மார்ட் மோட்) பெற்று கொள்ளலாம்.

நர்மல் மோடில் 16 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 2.5 மணி நேரங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஹார்ட்ரேட் சென்சார், எஸ்பிஓ2 சென்சார், ஜியோமேக்னட்டிக் சென்சார், கைரோஸ்கோப் உள்ளிட்ட பெரும்பாலான சென்சார்கள் உள்ளது. 110+ ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் ரன்னிங் கோர்ஸ் சப்போர்ட் உள்ளது.

ஆட்டோ வொர்க்அவுட் டிடெக்சன், டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் உள்ளது. விஓ2 மேக்ஸ் (VO2 Max) கிடைக்கிறது. ஹார்ட்ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் உள்ளிட்டவை உள்ளன. ரியல்மி லிங்க் ஆப் சப்போர்ட் உள்ளது. ரூ.7,999ஆக விலை இருக்கிறது. ரூ.500 அறிமுக சலுகையுடன் ஜூன் 5ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட், அமேசானில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
realme Watch S5 20 Days Battery 5ATM Water Resistance Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X