Home
Gadgets

பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. AMOLED டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட்.. 20 நாட்கள் பேட்டரி.. Realme Watch S2 அறிமுகம்!

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி வாட்ச் எஸ்2 (Realme Watch S2) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஏஐ பர்சோனல் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டரிங், ஆட்டோமேட்டிக் ஆக்டிவிட்டி ரெககனைஷன், 20 நாட்கள் பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங், மியூசிக் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களில் மிரள விட்டுள்ளது. பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ரெட்மி வாட்ச் எஸ்2 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி வாட்ச் எஸ்2 அம்சங்கள் (Realme Watch S2 Specifications): இந்த மாடலில் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (AOD) மாடலாகும். ரவுண்ட் டயல் டிசைனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டிருக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்கும்! AMOLED டிஸ்பிளே! AI அசிஸ்டன்ட்! எந்த வாட்ச்

அதேபோல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் மாடல்களில் வருகிறது. கிரே (Grey), சில்வர் (Sliver) மற்றும் பிளாக் (Black) கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த ரியல்மி வாட்ச் எஸ்2 மாடலில் சூப்பர் ஏஐ என்ஜின் (Super AI Engine) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஏஐ பர்சோனல் அசிஸ்டன்ட் (AI Personal Assistant) வருகிறது.

டெக்ஸ்ட் டூ இமேஜ் (Text to Image) சப்போர்ட் உடன் ஏஐ வாட்ச் பேஸ்கள் (AI Watch Face) வருகின்றன. ஆகவே, கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 150 இன்-பில்ட் வாட்ச் பேஸ்கள் வருகின்றன. இதில் டைனாமிக் வாட்ச் பேஸ்கள் (Dynamic Watch Faces), ஸ்டாடிக் வாட்ச் பேஸ்கள் (Static Watch Faces) இருக்கின்றன.

மேலும், ஏஓடி வாட்ச் பேஸ்கள் (AOD Watch Faces) மற்றும் டிஐஓய் வாட்ச் பேஸ்கள் (DIY Watch Faces) வருகின்றன. கிளவுட் வாட்ச் பேஸ்கள் (Cloud Watch Faces) வருவதால், தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரெட்மி வாட்ச் எஸ்2 மாடலில் பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கவர் செய்யப்பட்டு இருக்கின்றன.

பிளிப்கார்ட் பிச்சிக்கும்! AMOLED டிஸ்பிளே! AI அசிஸ்டன்ட்! எந்த வாட்ச்

மேலும், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), பிளட் ஆக்ஸிஜன் மானிட்டரிங் (Blood Oxygen Monitoring), ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring) சப்போர்ட் வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 110 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன.

ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகளுக்கு ஆட்டோமேட்டிக் ஆக்டிவிட்டி ரெககனைஷன் (Automatic Activity Recognition) சப்போர்ட் உள்ளது. இந்த டேட்டாக்களை மொபைல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ரியல்மி மாடலில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5 மீட்டர்கள் ஆழம் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ரெட்மி வாட்ச் எஸ்2 மாடலில் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இதுபோக ஸ்டான்டர்ட் மோடில் (Standard Mode) 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் (Standby Mode) 38 நாட்களுக்கும் பேக்கப் பெறலாம். மேலும், ஏஓடி மோடில் (AOD Mode) 5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், ப்ளூடூத் காலிங், மியூசிக் கன்ட்ரோல், மெசேஜ் ரிப்ளை போன்றவை வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் பிளாக் மற்றும் சில்வர் வேரியண்ட்டின் விலை ரூ.4,499ஆகவும், கிரே வேரியண்டின் விலை ரூ,4,999ஆகவும் இருக்கிறது. ரூ.500 அறிமுக சலுகை உடன் விற்பனைக்கு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இருப்பினும், இன்று மாலை 6 மணிக்கு எர்லிபேர்ட் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடலுடன் ரியல்மி 13 ப்ரோ மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடல்களும் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Watch S2 With AMOLED Display, 20 Days Battery Launched Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X