Home
Gadgets

லட்டு மாதிரி பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. 16 நாட்கள் பேட்டரி.. IP68 ரேட்டிங்.. GPS ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ரியல்மி பிரியர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்தது போல பட்ஜெட் விலையில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ரியல்மி வாட்ச் 5 (Realme Watch 5) மாடலும் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியை கம்மியான பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த ரியல்மி வாட்ச் 5 மாடலின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மாடல்களில் அவுட்டோர் பிரைட்னஸ் கம்மியாகவே இருக்கும். ஆனால், இந்த மாடலில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசைனிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. அலுமினியம் அலாய் & மெட்டாலிக் யுனிபாடி கிடைக்கிறது. ஃபங்ஸ்னல் கிரவுண் மற்றும் ஹனிகோம்ப் ஸ்பீக்கர் ஹோல்கள் இருக்கின்றன. 2டி பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்கிறது.

லட்டு மாதிரி பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. 16 நாட்கள் பேட்டரி.. மாடல்?

ப்ளூடூத் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், ஜிபிஎஸ் சப்போர்ட் கொடுக்கிறது. 5 ஜிஎன்எஸ்எஸ் சிஸ்டம் கொண்டுள்ளது. ரூட் டிராக்கிங் செய்து கொள்ளலாம். இது ஹைக்கிங் பிரியர்களுக்கு முக்கியமான பீச்சராக இருக்கும். ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. பேட்டரியிலும் லைட் மோட் மற்றும் ஸ்டான்டர்ட் மோட் கொடுத்துள்ளது.

ரியல்மி வாட்ச் 5 அம்சங்கள் (Realme Watch 5 Specifications): இந்த ரியல்மி மாடலில் 1.97 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கவர்ட் டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை. 2டி பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. மெட்டாலிக் பாடி கிடைக்கிறது.

ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஆப்பிள் மாடல்களை போல 3டி வேவ் ஸ்ட்ராப் (3D Wave Strap) கிடைக்கிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) செய்து கொள்ளலாம். இந்த ப்ளூடூத் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. 5 ஜிஎன்எஸஎஸ் சிஸ்டம் (GNSS Systems) கிடைக்கிறது.

இந்த ரியல்மி வாட்ச் 5 மாடலில் 300+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் மற்றும் 108 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. இதில் ஆக்டிவிட்டி டிராக்கர்களும் வருகிறது. இதுபோக பர்சனல் கோச் கிடைக்கிறது. இதில் ரன்னிங் கோர்ஸ், ஸ்மார்ட் ரன்னிங் பார்ட்னர் மற்றும் பேசிங் மெட்ரோநோம் உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. ஹார்ட் ரேட் மானிட்டர் கிடைக்கிறது.

மேலும், எஸ்பிஓ2 மேக்ஸ் மானிட்டர் (SpO2 Max Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor) கிடைக்கிறது. ப்ரீத் டிரெய்னிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த டேட்டாவை ஒன் டேப் மூலம் தெரிந்து கொள்ளலாம். ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) சப்போர்ட் கொடுக்கிறது. மேலும், மியூசிக் கன்ட்ரோல், கேம் கார்டியன் மோட், காம்பஸ் போன்றவை வருகின்றன.

இந்த ரியல்மி வாட்ச் 5 மாடலின் பேட்டரியை பார்க்கையில், ஸ்டான்டர்ட் மோடில் 16 நாட்களுக்கு யூசேஜ் கொடுக்கிறது. லைட் மோடில் 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 720 நிமிடங்களுக்கு ப்ளூடூத் காலிங் செய்து கொள்ளலாம். இந்த மாடலின் மார்கெட் விலை ரூ.4,499ஆக இருக்கிறது.

இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.3,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. டிசம்பர் 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்யலாம். டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver), மின்ட் ப்ளூ (Mint Blue) மற்றும் வைப்ரென்ட் ஆரஞ்ச் (Vibrant Orange) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Watch 5 With 16 Days Battery Life AMOLED Display Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X