பட்ஜெட் விலையில் அசத்தலான ரியல்மி வாட்ச் 2 அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!
ரியல்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி வாட்ச் 2 மாடலை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி வாட்ச் 2
விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ரியல்மி வாட்ச் 2 ஆனது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய சாதனம் 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 12 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட் பல்புகள், ரியல்மி பட்ஸ் கியூ, பட்ஸ் ஏர் மற்றும் பல போன்ற பிற ரியல்மி AIoT சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறனை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி வாட்ச் 2 மாடல். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.4-இன்ச் டிஸ்பிளே
ரியல்மி வாட்ச் 2 மாடல் ஆனது 1.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 320x320 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். மேலும் Sedentary நினைவூட்டல், கேமரா கட்டுப்பாடு மற்றும் Mediation அசிஸ்டென்ட் போன்ற அம்சங்களும் இதில் அணுக கிடைக்கும்.

315எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி வாட்ச் 2 மாடலில் 315எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் இது சிங்கிள் சார்ஜில் 12 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு பயனர்கள் விருப்பப்படி ரியல்மி வாட்ச் 2 மாடலில் 100-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்களை தேர்வு செய்ய முடியும்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, 90 ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். இதில் ஹைகிங், கோல்ஃப், உட்புற சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற ஓட்டம், டேபிள் டென்னிஸ், யோகா,கூடைப்பந்து, குத்துச்சண்டை போன்ற பலஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவுகள் உள்ளன.

ரியல்மி வாட்ச் 2 ஆனது ஐபி 68 மதிப்பீட்டை மட்டுமே கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை நீச்சலடிக்கும் போதும், குளிக்கும் போதும் பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் ப்ளூடூத் வி5-ஐ இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்
குறிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் உடன் இணக்கமானது இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். மேலும் இதய துடிப்பு, தூக்க கண்காணிப்பு, SpO2 போன்ற அம்சங்களை இதில் பெறமுடியும். இந்த சாதனத்தை அணிந்திருக்கும் போது ஒருவேளை உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகமானல் அது சார்ந்த அறிவிப்பு உடனே உங்களுக்கு கிடைக்கும். பின்பு இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.4,100-ஆக
உள்ளது.


Click it and Unblock the Notifications