சியோமி டிவிகளுக்கு போட்டியாக வெளிவரும் 43-Inch Realme TV.! எப்போது அறிமுகம்?
சியோமி, சாம்சங்,எல்ஜி போன்ற நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு இந்தயாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பிரபலமான அந்த நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனமும் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ரியல்மி நிறுவனம் பட்ஜெட், மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அனைத்துஇடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் டிவி மாடலையும் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி வரும் மே-25-ம் தேதி ரியல்மி நிறுவனம் தனது புதிய அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மற்றும் வாட்ச் மாடல்களைஅறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்த அறிமுகம் ஒரு ஆன்லைன் நிகழ்வின் மூலம் நடக்கும். ரியல்மி நிறுவனம்
இந்நிகழ்வுசார்ந்த ஊடக அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதுடன், அதன் டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்விற்காக ட்விட்டரில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

டிவிட்டரில் வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ரியல்மி டிஜிட்டல் நிகழ்வு வரும் மே 25-ம் தேதியன்று மதியம் 12.30மணி அளவில் நடைபெறும். பினபு இது டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களின் சில குறிப்புகள் மட்டும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதைப்பற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

ஆன்லைனில் கசிந்த ரியல்மி டிவியன் அம்சங்கள்
அன்மையில்,ரியல்மி டிவியின் ஸ்க்ரீன் அளவைக் காட்டும் புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அந்த புகைப்படத்தின்;படி ரியல்மி டிவியின் திரை அளவு 108cm ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்,43-இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நெட்பிலிக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. உடன் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் லோகோக்களும் பெட்டியில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்பு இரண்டு ரியல்மி டிவி மாடல்கள் - 43 இன்ச் மற்றும் 32 இன்ச் - வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவைகள் ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழ் தளத்தில் கடந்த மாதம் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 43-இன்ச் ஸ்க்ரீன் மற்றும் புல் HD(1,920x1,080 பிக்சல்கள்) அல்லது அல்ட்ரா-எச்டி /4கே ஆதரவுகளுடன் இந்த சாதனங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

டிவிட்டரில் கசிந்த ரியல்மி வாட்ச்சின் அம்சங்கள்
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் டிவட்டரின் வழியே சில அம்சங்களை குறிப்பிட்டுள்ளது, அது என்னவென்றால்,வரவிருக்கும்ரியல்மி வாட்ச் ஆனது 1.20 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, 320x320 பிக்சல்கள் தீர்மானம் போன்றவைகளை கொண்டிருக்கலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 160எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிடர் உள்ளிட்ட வசதிகளுடன் வெளிவரும்என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இது ஐபி 68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டு, கஸ்டம் இயக்க முறைமையின் கீழ் இயங்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications