தீபாவளிக்கு வெடி போடுறோமோ இல்லையோ.. இந்த ஹெட்போனை ஆர்டர் போடணும்.. மாஸ் அம்சத்துடன் Realme Techlife Studio H1
ரியல்மி (Realme) நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ஸ்மார்ட்போன் சாதனத்துடன், அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மாடலான ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 (realem TechLife Studio H1) என்ற சக்தி வாய்ந்த கலர்புல் ஹெட்ஃபோன் சாதனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த realme Techlife Studio H1 ஹெட்போன்ஸ் சாதனத்தில் நிறுவனம் பல அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ளது. இதன் விலை என்ன? இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? இதன் விற்பனை எப்போது என்ற முழுவிபரம் இதோ.
ரியல்மி நிறுவனம் அதன் முதல் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் சாதனமாக இந்த புதிய ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 (TechLife Studio H1) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹெட்போன்ஸ் சாதனம் 40mm மெகா டைனமிக் பாஸ் டிரைவர் ஆதரவுடன் எல்டிஏசி ஆடியோ கோடக் (LDAC Audio Codec) அம்சத்தை கொண்டுள்ளது. இது ஹை-ரெஸ் சான்றை (Hi-res Certification) பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வெடி போடுறோமோ இல்லையோ.. இந்த ஹெட்போனை ஆர்டர் போடணும்:
இது 43dB ஹைபிரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Noise Cancellation) உடன் மூன்று லெவல் ஸ்மார்ட் ஏஎன்சி (3 Level Smart ANC) ஆதரவை கொண்டுள்ளது. இதில் ஸ்பேசில் ஆடியோ எபக்ட் (Spatial audio effect), 80ms அல்ட்ரா லோ - லேடன்சி ஆதரவு (80ms ultra-low latency) போன்ற ஆதரவுகளை ரியல்மி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த realme Techlife Studio H1 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மடக்ககூடிய போல்டபில் (Foldable) வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த சாதனம் பவர் இண்டிகேட்டர் (Power Indicator) மற்றும் கனெக்ஷன் ஸ்டேட்டஸ் இண்டிகேட்டர் (Connection Status Indicator) அம்சங்களை கொண்டுள்ளது. இது வால்யூம் கண்ட்ரோல் (Volume Control), ANC கண்ட்ரோல் (ANC Control) போன்றவற்றை கொண்டுள்ளது. இது AAC, SBC, LDAC ஆடியோ ஆதரவுகளை ஆதரிக்கிறது. இது 20Hz மினிமம் ஃபிரிக்வென்ஸி ரெஸ்பான்ஸ் முதல் 40000Hz மேக்சிமம் ஃபிரிக்வென்ஸி ரெஸ்பான்ஸ் வரையில் இயங்க கூடியது.
ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் விலை (realem TechLife Studio H1 Wireless Headphones Price):
இந்த புதிய ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் (realem TechLife Studio H1 Wireless Headphones) ப்ளூடூத் வெர்ஷன் 5.4 இல் இயங்குகிறது. இதன் இணக்கம் 10மீட்டர் தூரம் வரை சிறப்பாக இயங்கக்கூடியது. இந்த சாதனம் 600mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் சார்ஜிங் நேரம் 1.5 மணிநேரமாகும். இது ரெட், வைட் மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை பற்றி பேசுகையில், இந்தரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் (realem TechLife Studio H1 Wireless Headphones) சாதனம் ரூ.4999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகையில் ஒரு பகுதியாக இதன் விலை மீது, ரூ. 500 தள்ளுபடி செய்யப்பட்டு அக்டோபர் 21, 2024 ஆம் தேதி முதல் வெறும் ரூ. 4,499 என்ற விலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக வாங்க கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








