வீட்டுக்கு வீடு இதான்.. பட்ஜெட்ல QLED டிஸ்பிளே.. 40W ஆடியோ.. டால்பி அட்மோஸ்.. டால்பி விஷன்.. எந்த மாடல்?
கியூஎல்டி டிஸ்பிளே பிரியர்களை அறக்க பறக்கும் வைக்கும் பட்ஜெட்டில் ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவி (Realme TechLife Cinesonic TV) மாடல்கள் இந்திய மார்கெட்டில் சத்தமில்லாமல் களமிறங்கி இருக்கின்றன. கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், டால்பி விஷன், டால்பி அட்மோஸ், பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட், டோட்டல் சோனிக் ஆடியோ டெக்னாலஜி போன்ற பக்கா பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவியின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவி அம்சங்கள் (Realme TechLife Cinesonic TV Specifications): இந்த சினிசோனிக் டிவியில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்கள் வருகின்றன. 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடல்களில் எல்இடி (LED) டிஸ்பிளேவும், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் கியூஎல்இடி (QLED) டிஸ்பிளேவும் வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் வருகிறது. 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் உள்ளது. அதேபோல எச்டிஆர்10 (HDR10) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது. மேலும், ஐ கம்போர்ட் பீச்சர் (Eye Comfort Feature) கொண்டிருக்கிறது.
விவிட் மோட் (Vivid Mode), ஸ்டான்டர்ட் மோட் (Standard Mode), ஸ்போர்ட்ஸ் மோட் (Sport Mode), மூவி மோட் (Movie Mode) வருகிறது. இதுபோக யூசர் மோட் (User Mode) மற்றும் எனர்ஜி சேவிங் மோட் (Energy Saving Mode) வருகிறது. இந்த ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவியில் மீடியாடெக் குவாட் கோர் (MediaTek Quad Core) சிப்செட் வருகிறது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் வருகின்றன.
வீடியோ மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்க சிப்செட் மட்டுமல்லாமல், பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் (Built-in Graphics Unit) வருகிறது. இந்த ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 40W ஆடியோ அவுட்புட் கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சினிமாடிக் சரவுண்ட் சவுண்ட் (Cinematic Surround Sound) சப்போர்ட் வருகிறது.
மேலும், ஆடியோவுக்காக டோட்டல் சோனிக் (Total Sonic Technology) வருகிறது. 2 பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. வீடியோவை போலவே ஆடியோவிலும் ஸ்டான்டர்ட், மூவி, ஸ்போர்ட், மியூசிக் மற்றும் யூசர் போன்ற மோட்கள் வருகின்றன. இந்த டிவியின் போர்ட் கனெக்டிவிட்டியை பார்க்கையில் 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) உள்ளது.
அதேபோல 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), மினி ஏவி (Mini AV) மற்றும் எல்ஏஎன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி வருகிறது.
ரியல்மி டெக்லைப் சினிசோனிக் டிவி விலை (Realme TechLife Cinesonic TV Price): இந்த டிவியின் 43 இன் மாடலின் விலை ரூ. 41,999ஆகவும், 50 இன்ச் மாடலின் விலை ரூ.53,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 55 இன்ச் மாடலின் விலை ரூ.66,999ஆகவும், 65 இன்ச் மாடலின் விலை ரூ.85,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர வருகிறது. விரைவில் ஆர்டருக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications