ஏப்ரல் 29: இந்தியாவில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம்.!
ரியல்மி நிறுவனம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி புதிய 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடல்
ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடல் ஆனது ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 1920 × 1080 பிக்சல் தீர்மானம், ஃபுல் விஷன் பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ரியல்மியின் க்ரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சினையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடல்.
அதேபோல் 24W டால்பி ஆடியோ ஸ்பீக்கருடன் குவாட் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடல். அதேபோல் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர், ARM கார்டெக்ஸ்-A55 CPU மற்றும் Mali-G31 MP2 GPU ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் E4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி ஜிடி 2 சாதனம். பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 sensor சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 2. மேலும் பச்சை, வெள்ளை, கருப்பு நிற்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications