இந்தியாவில் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம்: விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி சீரிஸை(Realme Smart TV X FHD series) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 40-இன்ச் மற்றும் 43-இன்ச் அளவுகளில் டிவிகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

40-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. மேலும் இதன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.25,999-ஆகஉள்ளது. குறிப்பாக 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மே 4-ம் தேதி விற்பனைக்கு வரும், அதேபோல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மே 5-ம் தேதி விற்பனைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளை ரியல்மி, பிளிப்கார்ட் வலைத்தளங்களில் வாங்க முடியும்.

ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி 40-இன்ச், 43-இன்ச் மாடல்கள் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் 5.76 மிமீ பெசல்கள் கொண்டுள்ளன. பின்பு 1,920x1,080 பிக்சல் தீர்மானம், எச்.எல்.ஜி மற்றும் எச்.டி.ஆர் 10 ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதியுடன் கார்டெக்ஸ்-A55 கோர்களை கொண்டுள்ளன. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி மாடல்கள்.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக ஆப் பயன்பாடுகளுக்கான அணுகலை பெறமுடியும். குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி 40-இன்ச்,43-இன்ச் மாடல்களில் 24W குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. அதேபோல் இவை டால்பி ஆடியோ ஆதரவை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

குறிப்பாக இந்த இரண்டு ரியல்மி ஸ்மார்ட் டிவிகளில் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் ஆதரவும் உள்ளது. இதுதவிர இந்த
இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் மென்மையான கேமிங்கிற்காக ஆட்டோ லோ லேட்டன்சி பயன்முறையையும் (ALLM) வழங்குகிறது.

இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி சீரிஸ் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








