இனி எளிமையாக ரியல்மி ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும்.! எப்படி தெரியுமா?

|

சில மாதங்களுக்கு முன்பு ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் தற்சமயம் இந்தியாவில் உள்ள 1,250 ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது எனவே எளிமையாக இந்த ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும்.

 43-இன்ச் அளவுகளில் ரியல்மி

குறிப்பாக 32-இன்ச், 43-இன்ச் அளவுகளில் ரியல்மி ஸ்மார்ட் டிவிககள் வெளிவந்துள்ளது. இவற்றுடன் ரியல்மி 100வாட் சவுண்ட்பார் மாடலையும், அறிமுகம் செய்துள்ளது, மேலும் ரியல்மிநிறுவனம் 780+ சேவை மையங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் செய்துள்ள 32-இன்ச்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம்

இதை நீங்க பண்ணாதிங்க., இரவு முழுவதும் செல்போன் சார்ஜ்., வெடித்து சிதறி 3 பேர் பலி

செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இது 400nits பிரைட்நஸ் வசதியுடன்

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் குரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சினுடன் வருகிறது, இது 400nits பிரைட்நஸ் வசதியுடன் மேம்பட்ட பட தரத்தை வழங்குகிறது. பின்பு bezel-lessடிசைன் இந்த சாதனங்களில் இருப்பதால் கண்டிப்பாக அதிக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்துள்ள இந்த புதிய

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் கார்டெக்ஸ்-ஏ54 சிபியு ஆதரவும் உள்ளது. மேலும் மாலி-470 எம்பி3 ஜபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும்

ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை இது டால்பி ஆடியோவுடன் 24W குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது.

ரியல்மி சாதனங்கள் ஆல் இன் ஒன்

இந்த புதிய ரியல்மி சாதனங்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது. புதிய ரியல்மி ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களுடன் வருகிறது.

டிவிகளில் கூகிள் பிளே

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகளில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 5,000+ பயன்பாடுகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் அசிஸ்டென்ட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. இது Chromecast உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ளது.இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மி டிவிகள் மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ்.பி.டி.எஃப், டி.வி.பி-டி 2 மற்றும் ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது

ஸ்மார்ட் டிவியின் விலை

32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Smart TV Now Available In The Offline Market In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X