Home
Gadgets

இந்தியாவில் 32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! முழு விவரம்.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஆனது 3

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது 32-இன்ச் எல்இடி டிஸ்பிளேவுடன் பெசல்லெஸ் வடிவமைப்போடு வருகிறது. பின்பு இது குறைந்த நீல ஒளி வெளிப்பாட்டிற்க்கான TUV ரெய்ன்லேண்ட் சான்றிதழையும் பெற்றுள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலில்

ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவாட்-கோர் மீடியொடெக் ப்ராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் 64 பிட் கட்டமைப்பில் ARM கார்டெக்ஸ்-ஏ 35 சிபியு மற்றும் மாலி 470 ஜிபியூ
ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய

மேலும் ரியல்மி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் ப்ரைட்நஸ், கலர் மற்றும் ஷார்ப்னஸை மேம்படுத்தும் அம்சங்களுடன் சேர்ந்து படத்தின் தரத்தை மேம்படுத்துவதாக கூறப்படும் குரோமா பூஸ்ட் இமேஜ் எஞ்சின் ப்ராசஸர் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலில்

புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலில் 20 வாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் மிகவும் தெளிவான ஒலி தரத்தை உருவாக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மொபைல் கேம்களை

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது CC Cast ஆதரவைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் மொபைல் கேம்களை விளையாட அல்லது வீடியோக்களை தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேபலெட் மாடல்களில் இருந்து டிவியில் ஸ்ட்ரீம் செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.

ஹங்காமா மற்றும் ஈரோஸ் நவ் போன்ற

யூடியூப், ஹங்காமா மற்றும் ஈரோஸ் நவ் போன்ற பல்வேறு ஆப் வசதி கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடல். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட் டிவி ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. குறிப்பாக இது ஆண்ட்ராய்டு டிவிஇல்லை என்று கூறப்படுகிறது.

 இரண்டு எச்டிஎம்ஐ போ

வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், ஏவி போர்ட், லேன் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடல். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,999-ஆகும். பின்பு ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32-இன்ச் மாடலை பிளிப்கார்ட், ரியல்மி வலைத்தளம் மூலம் அக்டோபர் 3-ம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Smart TV Neo 32-inch With Dolby Audio Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X