விரைவில் அசத்தலான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யும் ரியல்மி நிறுவனம்.!
ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்டுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட் டிவி ஆனது வாய்ஸ் கண்ட்ரோல் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் குரோம்காஸ்ட் உள்ளிட்ட ஆதரவுகளுடனும் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்போனில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்..
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 2எம்பி மேக்ரோகேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுஉள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுடன்வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 மாடலின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. குறிப்பாக ஸ்பீட் பிளாக் மற்றும் ஸ்பீட் ப்ளூ நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் ஆன்லைனில் தளங்களில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications