மே 25: பிளிப்கார்ட்: ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! கசிந்தது அம்சங்கள்.!

|

ரியல்மி நிறுவனம் வரும் மே 25-ம் தேதி தனது புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் வலைதளம் வழியே விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 24வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த சாதனங்கள்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் 64-பிட் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் உடன் ஏஆர்எம்கார்டெக்ஸ் ஏ53 கோர் மற்றும் மாலி-470 எம்பி3 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் 24வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்ஆதரவுடன் இந்த சாதனங்கள் களமிறங்கும்.

ஆன்லைனில் கசிந்த ரியல்மி டிவியன் அம்சங்கள்

அன்மையில்,ரியல்மி டிவியின் ஸ்க்ரீன் அளவைக் காட்டும் புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அந்த புகைப்படத்தின் படி ரியல்மி டிவியின் திரை அளவு 108cm ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்,43-இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நெட்பிலிக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. உடன் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் லோகோக்களும் பெட்டியில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்பு இரண்டு ரியல்மி டிவி மாடல்கள் - 43 இன்ச் மற்றும் 32 இன்ச் - வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவைகள் ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழ் தளத்தில் கடந்த மாதம் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 43-இன்ச் ஸ்க்ரீன் மற்றும் புல் HD(1,920x1,080 பிக்சல்கள்) அல்லது அல்ட்ரா-எச்டி /4கே ஆதரவுகளுடன் இந்த சாதனங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

ரைட்நஸ் மற்றும் பல்வேறு

குறிப்பாக புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவியில் க்ரோமா பிக்சர் எஞ்சின் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தெளிவான காட்சிகளை பார்க்க உதவும் எனக் கூறப்படுகிறது. மேலும் 400nits பிரைட்நஸ் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி.

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த ஆஃபர் மே 31 வரை கிடைக்கும்.!பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த ஆஃபர் மே 31 வரை கிடைக்கும்.!

 சரவுண்ட் ஒலி

ரியல்மி ஸ்மார்ட் டிவியில் சினிமா சரவுண்ட் ஒலி அனுபவத்தை வழங்கும் டால்பி ஆடியோவும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அளவில் நடைபெறு

டிவிட்டரில் வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ரியல்மி டிஜிட்டல் நிகழ்வு வரும் மே 25-ம் தேதியன்று மதியம் 12.30மணி அளவில் நடைபெறும். பினபு இது டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீம்
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19,990-க்கு

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் 43-இன்ச் ரியல்மி டிவி ஆனது 19,990-க்கு விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி டிவி சார்ந்த தகவல் வெளிவந்தால் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Realme Smart TV Design, Specification Revealed on Flipkart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X