Home
Gadgets

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 4கே ஆதரவுடன் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நிர்வாக அதிகாரி

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் அவர்கள் அண்மையில் ஒரு டீஸர் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஸ்மார்ட் டிவியின் முக்கியஅம்சங்கள் பற்றி அவர் எதுவும் கருத்து தெரவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாதவ் அவர்கள் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள்

32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள்

மேலும் ரியல்மி நிறுவனம் எற்கனவே அறிமுகம் செய்த 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களைப் பற்றி சற்று விரவிவாகப் பார்ப்போம்.ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

400nits பிரைட்நஸ் வசதி

400nits பிரைட்நஸ் வசதி

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் குரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சினுடன் வருகிறது, இது 400nits பிரைட்நஸ் வசதியுடன் மேம்பட்ட பட தரத்தை வழங்குகிறது. பின்பு bezel-lessடிசைன் இந்த சாதனங்களில் இருப்பதால் கண்டிப்பாக அதிக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர்

மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் கார்டெக்ஸ்-ஏ54 சிபியு ஆதரவும் உள்ளது. மேலும் மாலி-470 எம்பி3 ஜபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

ஆல் இன் ஒன் ரிமோட்

ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை இது டால்பி ஆடியோவுடன் 24W குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது.

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ

ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகளில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 5,000+ பயன்பாடுகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் அசிஸ்டென்ட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. இது Chromecast உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ளது.இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மி டிவிகள் மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ்.பி.டி.எஃப், டி.வி.பி-டி 2 மற்றும் ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Smart TV 4K 43-inch May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X