Home
Gadgets

மே 4: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.!

ரியல்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 மே 4-ம் தேதி ரியல்மி நிறுவனம்

இந்நிலையில் வரும் மே 4-ம் தேதி ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி இந்தியா மூன்றாவது ஆண்டு விழா ஆனது வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்த விழாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி,ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சிறந்த தொழில்நுட்ப வசதி

மேலும் வெளிவந்த தகவலின்படி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷன் மற்றும் ஆடியோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிமென்சிட்டி 1200 பிராசஸர்

இந்த ஸ்மார்ட் டிவியுடன் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வசதியுடன் அறிமுகம்செய்யப்பட இருக்கிறது.மேலும் ரியல்மி நிறுவனம் எற்கனவே அறிமுகம் செய்த 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவிகளின்அம்சங்களைப் பற்றி சற்று விரவிவாகப் பார்ப்போம்.

 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் குரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சினுடன் வருகிறது, இது 400nits பிரைட்நஸ் வசதியுடன் மேம்பட்ட பட தரத்தை
வழங்குகிறது. பின்பு bezel-lessடிசைன் இந்த சாதனங்களில் இருப்பதால் கண்டிப்பாக அதிக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலி-470 எம்பி3 ஜபியு

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் கார்டெக்ஸ்-ஏ54 சிபியு ஆதரவும் உள்ளது. மேலும் மாலி-470 எம்பி3 ஜபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

ரியல்மி 32-இன்ச்

ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை இது டால்பி ஆடியோவுடன் 24W குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது.

மேசான் பிரைம் வீடியோ ம

ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களுடன் வருகிறது.

hromecast உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டைக்

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகளில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 5,000+ பயன்பாடுகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் அசிஸ்டென்ட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. இது Chromecast உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ளது.இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மி டிவிகள் மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள்,
எஸ்.பி.டி.எஃப், டி.வி.பி-டி 2 மற்றும் ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Smart TV 4K 43-Inch Launching in India on May 4: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X