பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

|

உங்கள் கையில் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இருந்தாலும் சரி, அல்லது ஒரு ஹை-எண்ட் பிளாக்ஷிப் / ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இருந்தாலும் சரி, எப்படியாவது ஒரு டேப்லெட்-ஐ வாங்கி விட வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் நிச்சயம் இருக்கும்!

ஏனெனில்.. என்னதான் 6.5-இன்ச் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10+ இருந்தாலும் கூட ஒரு ஸ்மார்ட்போனால், டேப்லெட் வழங்கும் 'வியூயிங் எக்ஸ்பீரியன்ஸை' (Viewing Experience) வழங்கிட முடியாது அல்லவா?!

அந்த குறையை தீர்க்க போகும் Realme; அதுவும் பட்ஜெட் விலையில்!

அந்த குறையை தீர்க்க போகும் Realme; அதுவும் பட்ஜெட் விலையில்!

உடனே இது பழைய Realme Pad அல்லது Realme Pad Mini டேப்லெட்-ஐ பற்றிய கட்டுரை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

மேற்குறிப்பிட்ட ரியல்மி டேப்லெட்டுகள் ஆனது, இந்தியாவில் முறையே ரூ.15,999 க்கும் மற்றும் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கிறது. அது ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். நாங்கள் இங்கே பேசுவது.. வரப்போகும் ரியல்மி டேப்லெட்-ஐ பற்றியது. அது - Realme Pad X 5G ஆகும்.

ரியல்மி பேட் எக்ஸ் என்ன விலைக்கு அறிமுகமாகும்? எப்போது இந்தியாவிற்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

Samsung-ஐ வம்பிக்கும் Realme Pad X 5G டேப்லெட்!

Samsung-ஐ வம்பிக்கும் Realme Pad X 5G டேப்லெட்!

கிட்டத்தட்ட எல்லா பட்ஜெட்களிலும் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை வழங்கும் ஒரு நிறுவனம் என்றால் அது ரியல்மி தான்.

இப்படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை "ஒரு கலக்கு கலக்கும்" ரியல்மி நிறுவனம், டேப்லெட் பிரிவை ஆட்சி செய்யும் சாம்சங் நிறுவனத்தை வம்பு இழுக்கும் நோக்கத்தின் கீழ் அதன் அடுத்த பட்ஜெட் விலை டேப்லெட்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறியாதோர்களுக்கு இது ரியல்மியின் மூன்றாவது டேப்லெட் ஆகும்.

Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

எப்போது இந்திய அறிமுகம்?

எப்போது இந்திய அறிமுகம்?

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆக உருவாகி உள்ள Realme Pad X-ஐ, மாதவ் ஷெத் (ரியல்மி இந்தியா நிறுவனத்தின் விபி) தன் ட்விட்டர் வழியாக டீஸ் செய்த வேகத்தில், Realme நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் Realme Pad X-க்கான மைக்ரோசைட்டும் 'லைவ்' ஆனது!

அதன் வழியாக நீல நிறத்தில் உள்ள Pad X மற்றும் (வாவ் சொல்ல வைக்கும்) Realme ஸ்டைலஸை நம்மால் வெளிப்படையாக காண முடிகிறது.

ஆனால் அறிமுக தேதி குறித்த சரியான தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது "உடனடி வெளியீட்டை" சந்திக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Flipkart வழியாக வாங்க கிடைக்கும்!

Flipkart வழியாக வாங்க கிடைக்கும்!

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள Realme Pad X 5G ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart வழியாகவும் மற்றும் நிறுவனத்தின் சொந்த ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும் வாங்க கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், ரியல்மி பேட் எக்ஸ் ஆனது சீனாவில் கடந்த மே மாதமே அறிமுகமாகி விட்டது. முன்னரே குறிப்பிட்டபடி, இது நிறுவனத்தின் மூன்றாவது டேப்லெட் ஆகும். அதாவது Realme Pad மற்றும் Realme Pad mini-ஐ தொடர்ந்து அறிமுகமான மாடல் ஆகும்.

Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!

11-இன்ச் டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்ஸ்னு சும்மா மிரட்டும்!

11-இன்ச் டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்ஸ்னு சும்மா மிரட்டும்!

அம்சங்களை பொறுத்தவரை, Realme Pad X 5G ஆனது 60Hz ஸ்டாண்டர்ட் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 11-இன்ச் அளவிலான 2K LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இதன் டிஸ்ப்ளே 5:3 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோ, 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

மேலும் குவாட் ஸ்பீக்கர் செட்டப்பை கொண்டுள்ள இந்த டேப்லெட் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவையும் ஆதரிக்கிறது.

இது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் பேக் செய்கிறது.

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமராக்கள் எல்லாம் எப்படி?

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமராக்கள் எல்லாம் எப்படி?

அதுவும் கலக்கலாகவே உள்ளது! Realme Pad X 5G ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 8,340mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, இது 13MP ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 105 டிகிரி வரையிலான ஃபீல்ட்-ஆஃப்-வியூவை வழங்கும் 8MP செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

சுவாரசியமாக இதன் செல்பீ கேமராவானது போர்ட்ரெய்ட்-சென்ட்ரிங் அம்சத்துடன் வருகிறது.

Nothing Ear 1 Stick விலை: பேசாமல் கூட ரூ.2,000 போட்டு புது போன் வாங்கிடலாம்!Nothing Ear 1 Stick விலை: பேசாமல் கூட ரூ.2,000 போட்டு புது போன் வாங்கிடலாம்!

ரியல்மி பேட் எக்ஸ் 5G என்ன விலைக்கு வரும்?

ரியல்மி பேட் எக்ஸ் 5G என்ன விலைக்கு வரும்?

இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும்: அது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB ஆகும்.

ரியல்மி பேட் எக்ஸ்-இன் சீன விலை விவரங்களை வைத்து பார்க்கும் போது இந்தியாவில், இதன் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.15,360 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் விருப்பமானது சுமார் ரூ.18,999 க்கு வெளியாகலாம்.

இது வெறுமனே எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயமே ஆகும். எனவே இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

Realme Pad X 5G டேப்லெட்டின் அதிகாரப்பூர்வ இந்திய விலை விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் எப்படி பார்த்தாலும் இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்று நம்புவதில் எந்த தவறும் இல்லை.

Photo Courtesy: Realme

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Pad X 5G India launch Confirmed Check Specifications Expected Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X