Home
Gadgets

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.16,499 போதும்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 8360mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

கம்மியான பட்ஜெட்டில் 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட டேப்லெட் தேடிக்கொண்டிருந்த கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கும் ரியல்மி பேட் 2 (Realme Pad 2) கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மட்டுமே டிராபேக்காக இருக்கிறது. மற்றபடி 8360mAh பேட்டரி, 33W சூப்பர்வூக் சார்ஜிங், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் போன்ற பீச்சர்கள் பக்காவாகவே இருக்கின்றன. இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த ரியல்மி பேடில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி (6nm Octa Core MediaTek Helio G99) சிப்செட் கிடைக்கிறது. பேட்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ரியல்மி யுஐ 4.0 (realme UI 4.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.16,499 போதும்.. 11.5 இன்ச் டிஸ்பிளே மாடல்!

ஓடிடிக்காக டேப்லெட் வாங்க நினைக்கும் கஸ்டமர்களுக்கு பக்கா டிஸ்பிளே பீச்சர்களை இந்த டேப்லெட் கொடுக்கிறது. ஆகவே, 2K ரெசொலூஷன் கொண்ட 11.5 இன்ச் (2000x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபிளிக்கர்ஃப்ரீ வியூவிங் அனுபவம் ப்ளூ லைட் புரொடெக்சன் (Blue Light Protection) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் அல்ட்ரா விஷன் என்ஜின் (Ultra Vision Engine) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது.

டிஸ்பிளேவுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. ஆகவே, சரவுண்ட் ஆடியோ அனுபவம் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொடுக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது.

டேப்லெட்களில் வழக்கமாக கிடைக்கும் சிங்கிள் ரியர் கேமரா மற்றும் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி பேட் 2 மாடலில் 8 எம்பி மெயின் கேமரா இருக்கிறது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. முன்பே சொன்னதுபோல இதுவொரு 4ஜி எல்டிஇ (4G LTE) கனெக்டிவிட்டி கொண்ட டேப்லெட் மாடலாகும். இதுபோக வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) சப்போர்ட் கிடைக்கிறது. கிரே (Grey) மற்றும் கிரீன் (Green) கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

இந்திய மார்கெட்டில் அறிமுகமானபோது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2000 விலை குறைப்பில் ரூ.17,999 கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.16,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டுக்கு ஏற்ற டேப்லெட் மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 With 6GB RAM Sale Under Rs 17000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X