போடு ஆட்டத்தை.. ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையில் டேப்லெட் வாங்கலாமா? மாஸா வரும் realme.. என்ன விலை தெரியுமா?
ரியல்மி (Realme) நிறுவனம் செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி அன்று அதன் புதிய பட்ஜெட் செக்மென்ட் டேப்லெட் சாதனமான ரியல்மி பேட் 2 லைட் (Realme Pad 2 Lite) அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் (Android Tablet) சாதனத்தை நிறுவனம் மிக-மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டேப்லெட் சாதனத்தை நிறுவனம் அதனுடைய புதிய ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி பி2 ப்ரோ (realme P2 Pro) சந்தானத்துடன் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை சொல்ல போனால், ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன் மாடலான realme P2 Pro-வின் எதிர்பார்க்கப்படும் விலையை விட, ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய realme Pad 2 Lite டேப்லெட் சாதனத்தின் விலை மிக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான லீக் தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் இந்த டேப்லெட் சாதனம் வெளியானால், நிலைமை தலைகீழாக மாறவாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையில் டேப்லெட் வாங்கலாமா? மாஸா வரும் realme Pad 2 Lite Tablet:
நமக்கு தெரிந்த தகவலை வைத்து பார்க்கையில், ரியல்மி நிறுவனம் வரும் செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருக்கும் ரியல்மி பி2 ப்ரோ (realme P2 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புதிய ரியல்மி பேட் 2 லைட் (realme Pad 2 Lite) இந்தியாவில் ரூ. 17,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் உண்மையானால், மக்கள் கட்டாயமாக கையடக்க ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு பதிலாக, ஆளுக்கு ஒரு டேப்லெட்டை ஆர்டர் செய்து மகிழ்வார்கள் என்று கருதப்படுகிறது. இந்த புதிய realme Pad 2 Lite சாதனம் 8" இன்ச் அளவு அல்லது 10.1" இன்ச் அளவு கொண்ட 2K டிஸ்பிளேவுடன் (Display) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே 1920 x 1200 பிக்சல் குவாலிட்டியை வழங்கும்.
இது கண்களை சோர்வடைய செய்யாத கண் பாதுகாப்பு அம்சத்துடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் இயங்கும் 450 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளேவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 8300mAh பேட்டரி உடன் சிறந்த ஆயுளை வழங்கும் சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய ரியல்மி பேட் 2 லைட் சாதனம் 8GB ரேம் (RAM) உடன் வரும்.
ரியல்மி பேட் 2 லைட் எதிர்பாக்கப்படும் விலை (Realme Pad 2 Lite Expected Price):
இந்த டேப்லெட் மொத்தம் 16GB டைனமிக் ரேம் (Dynamic RAM) வரை இயங்கும் திறன் கொண்டது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. இந்த புதிய realme Pad 2 Lite சாதனம் ஹீலியோ G99 சிப்செட் (Helio G99 SoC) உடன் இயங்கும். இந்த புதிய டேப்லெட்டின் டீசர் சாதனத்தை வயலட் மற்றும் பிளாக் நிறத்தில் காண்பித்துள்ளது.
இந்த புதிய realme Pad 2 Lite டேப்லெட் சாதனம் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் வருகிறது. கேமரா பற்றி பேசுகையில், இது 8MP ரியர் கேமரா உடன் 5MP முன்பக்க செல்பி கேமராவை வழங்குகிறது. இது 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தின் LTE வேரியண்ட் மாடல் ரூ. 19,999 விலையிலும், WiFi மாடல் ரூ. 17,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications