பற்கள் பிரகாசிப்பதற்கான பாலிஷ் மோடு உடன் Realme M1 சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் அறிமுகம்!
ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 சீரிஸுடன் இந்தியாவில் புதிய மின்சார டூத் பிரஷை அறிமுகப்படுத்தவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் எலக்ட்ரிக் டூத் பிரஷிற்கு ரியல்மி நிறுவனம் ரியல்மி M1 சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் என்று பெயரிட்டுள்ளது. இந்த எலெக்ரிக் டூத் பிரஷ் பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் டூத் பிரஷ்
ரியல்மி நிறுவனம் வரவிருக்கும் எலக்ட்ரிக் டூத் பிரஷ் சாதனத்தின் சில அம்சங்களை தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் டூத் பிரஷ் சாதனம் வெள்ளை மற்றும் நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் நான்கு கிளீனிங் முறைகளுடன் வருவதாக ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.

ரியல்மி சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ்
ரியல்மி நிறுவனத்தின் சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் சாதனத்தில் 4 வெவ்வேறு பயனர் மோடு விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்சிட்டிவ் பற்களுக்காகப் பிரத்தியேகமான சாப்ட் மோடு வழங்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கான கிளீனிங் மோடு, டீப் கிளீனிங் செய்வதற்கான வைட் மோடு மற்றும் பற்களைப் பிரகாசிப்பதற்கான பாலிஷ் மோடு ஆகியவை இதில் கொடுப்பட்டுள்ளது.

ஆன்டிபாக்டீரியல் பிரிஸ்டிலுடன் எலக்ட்ரிக் டூத் பிரஷ்
ரியல்மி சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் சாதனம் 90 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது, மேலும் இது பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் ஆதரிக்கிறது. சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் இரும்பு இல்லாத பிரிஸ்டல் தலையுடன் வருகிறது, இது 3.5 மிமீ மெல்லியதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது 99.99 சதவீத பாக்டீரியாக்களை வாயிலிருந்து அகற்றுவதாகக் கூறப்படும் டியூபண்ட் ஆன்டிபாக்டீரியல் பிரிஸ்டிலுடன் வருகிறது.

நிமிடத்திற்கு இத்தனை முறை சுழற்சியா?
ரியல்மி சோனிக் எலக்ட்ரிக் டூத் பிரஷ் சாதனம் நிமிடத்திற்கு 34000 முறை சுழலும் ஒரு சோனிக் மோட்டார் உடன் வருகிறது. இதற்கிடையில், நிறுவனம் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 புரோ ஸ்மார்ட்போன்களையும் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 7 சீரிஸ் போன்கள் 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வரும் என்பதையும் டீஸர் படம் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications