Home
Gadgets

Realme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன?

ரியல்மி நிறுவனம் நேற்று சீனாவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் தனது புதிய சாதனைகளை ஸ்மார்ட் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் கியூ மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்ஸ் மாடல்களுடன் சிறப்பான பவர் பேங்க் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி பட்ஸ் கியூ (Buds Q)

ரியல்மி பட்ஸ் கியூ (Buds Q)

ரியல்மி பட்ஸ் கியூ சாதனம் ஹெர்மெஸ் இணை வடிவமைப்பாளர் ஜோஸ் லெவி வடிவமைத்துள்ளார், நிறுவனத்தின் அறிவிப்புப்படி ரியல்மி பட்ஸ் கியூ இயர்போன்ஸ் 20 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுள் மற்றும் புளூடூத் 5.0 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Buds Q சாதனம் IPX4 சத்தின்றிதழ் பெற்ற வாட்டர் ஸ்பிளாஷ் பாதுகாப்புடன் 10mm டிரைவர்களுடன் வருகிறது.

ரியல்மே பட்ஸ் கியூ சிறப்பம்சம்

ரியல்மே பட்ஸ் கியூ சிறப்பம்சம்

இந்த ரியல்மி பட்ஸ் கியூ, 30W பாஸ்ட் வயர் சார்ஜிங்கை அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. பாஸ்ட் வயர் சார்ஜிங் மட்டுமே இந்த சாதனம் ஆதரிக்கிறது, வயர்லெஸ் சார்ஜிங் இதில் இல்லை. ரியல்மே பட்ஸ் கியூ சிறப்புத் தள்ளுபடி விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் கியூ விலை

ரியல்மி பட்ஸ் கியூ விலை

இந்திய மதிப்பின்படி ரியல்மி பட்ஸ் கியூ இந்தியாவில் ரூ.1,370 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி பட்ஸ் கியூ பிளாக், வைட் மற்றும் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சாதனம் ரியல்மீஸ் பட்ஸ் ஏர் மாடல் போன்றது, ஆனால் 13mm vs 12mm என்ற சற்று பெரிய அளவிலான டிரைவர்களை கொண்டுள்ளது. இதிலும் வயர்லெஸ் சார்ஜிங் விருப்பம் இல்லை மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கான்சலேஷன் அம்சமும் இதில் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சாதனம் 17 மணிநேர ஒருங்கிணைந்த பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ விலை

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ விலை

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ புளூடூத் 5.0 இணக்கத்துடன் கூடிய ரியல்மி ஆட்டோ இணைப்பு அம்சத்துடன் வருகிறது. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சாதனம் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனைக்கு பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

ரியல்மி பவர் பேங்க்

ரியல்மி பவர் பேங்க்

ரியல்மி நிறுவனம் இறுதியாக, ரியல்மி பவர் பேங்க் 30W டார்ட் மற்றும் பவர் பேங்க் 2 என்ற இரண்டு சக்தி வாய்ந்த பவர் பேங்க் சாதனங்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 30W டார்ட் பவர் பேங்க் சாதனம், 10,000 எம்ஏஎச் திறன் கொண்டது மற்றும் 30W வயர் சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாடல் சீன பிரத்தியேகமாகத் தோன்றுகிறது, இதுவரை இந்த சாதனத்திற்கான எந்த விலையும் அறிவிக்கப்படவில்லை.

ரியல்மி பவர் பேங்க் 2 விலை

ரியல்மி பவர் பேங்க் 2 விலை

ரியல்மி பவர் பேங்க் 2 சாதனம், 10,000 எம்ஏஎச் திறன் கொண்டது மற்றும் 18W டூ-வே சார்ஜிங்கை இந்த பவர் பேங்க் சாதனம் ஆதரிக்கிறது. இது ஒரு யூ.எஸ்.பி-ஏ போர்ட் மற்றும் ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட் கொண்டுள்ளது. இந்த புதிய ரியல்மி பவர் பேங்க் 2 இந்தியாவில் ரியல்மின் சொந்த தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை ரூ.999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme launches New Buds Q, Buds Air Neo True Wireless Earphones and Power Banks : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X